Morocco Earthquake Visuals (Photo Credit: Twitter)

செப்டம்பர் 09, மொராக்கோ (World News): வடக்கு ஆப்ரிக்காவில் இருக்கும் மொராக்கோ நாட்டில், நேற்று நள்ளிரவு உள்ளூர் நேரப்படி 11:11 மணியளவில் திடீரென அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது சில நிமிடங்கள் வரையிலும் தொடர்ந்தது.

முதலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியில் இருந்த அதே வேளையில், 19 நிமிடங்கள் கழித்து மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான நிலையில், இரண்டாவது நிலநடுக்கம் 4.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த தகவலை அமெரிக்க நிலநடுக்க ஆய்வியல் மையமும் உறுதி செய்துள்ளது. HC on Pocso Act: "பெண்ணின் ஆடை மீது பாலியல் நோக்கத்தோடு கை வைத்தாலும் குற்றமே" - குற்றவாளிக்கு தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்.! 

அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துபோயினர். நகரங்களில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சில தரைமட்டமாகியது. உடனடியாக மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.

இதனிடையே, மொராக்கோ நிலநடுக்கம் தொடர்பான செய்திகள் உலகளவில் வெளியானதை தொடர்ந்து, பலநாட்டு தலைவர்களும் தங்களின் இரங்கலை பதிவு செய்தனர். தங்களது நாடுகளின் சார்பில் இயன்ற மருத்துவ, அவசர மீட்புப்படை உட்பட பல உதவிகளை செய்து வருகின்றனர். அந்நாட்டுக்கு உலக நாடுகள் படை செல்கிறது.

இந்நிலையில், மொராக்கோவில் நடந்த நிலநடுக்கத்தில் சிக்கி 632 பேர் வரை பலியாகிவிட்ட நிலையில், 300 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீட்பு பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.