
மே 18, பாகிஸ்தான் (World News): ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி மதியம் 3 மணிக்கு மேல் பயங்கரவாதிகள் நடந்திய கொடூர தாக்குதலில் 26 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த விஷயத்திற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை தீவிரபடுத்திய இந்திய அரசு பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழைந்து ஜெய்ஷ்-இ-முகமது உட்பட பயங்கரவாத குழுக்களின் பயிற்சி இடங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் பாராட்டு தெரிவித்த நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஆதரித்து நேரடியாக ராணுவ தாக்குதலை இந்தியாவுக்கு எதிராக முன்னெடுத்தது.
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் :
இதனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இருந்த ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டன. இந்திய பாதுகாப்பு அமைப்பு மற்றும் ராணுவம் வீரத்துடன் செயல்பட்டு இந்தியாவை நோக்கி வந்த பல நூற்றுக்கணக்கான ட்ரோன்களை வானிலையே தாக்கி அழித்தது. மேலும் பாகிஸ்தானின் எல்லை கடந்து இஸ்லாமாபாத், கராச்சி ஆகிய முக்கிய நகரங்களில் இந்தியா பதில் தாக்குதலை முன்னெடுத்தது. Women's are Shy: துணையின் முன் ஆடை மாற்ற வெட்கப்படும் பெண்கள் - ஆய்வில் வெளியான தகவல்.!
பாகிஸ்தானில் அடுத்தடுத்த பாதிப்பு :
இந்த விஷயம் தெற்கு ஆசிய கண்டத்தில் இந்தியா - பாகிஸ்தானிடையே போரை உருவாக்கும் என்ற நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கா உட்பட உலக நாடுகள் தலையிட்டு இருதரப்பு சமரச பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. ஏற்கனவே உள்நாட்டு பிரச்சனை, பலுசிஸ்தான் ஆதரவு நாடு குறித்த கோஷம், உள்நாட்டு ராணுவத்தினர் மீது பலுசிஸ்தான் விடுதலை அமைப்பினர் நடத்திய தாக்குதல் ஆகியவற்றால் நிலைகுலைந்து இருந்த பாகிஸ்தான், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து உட்பட பல்வேறு விஷயங்களால் மேலும் பாதிக்கப்பட்டது.
விரைவில் உணவுப்பஞ்சம் :
இதனால் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு மாகாணங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பலுசிஸ்தான் ஆதரவு படைகள் வசம் உள்ள மாகாணங்களில் உணவு தட்டுப்பாடு அபரிதமாக அதிகரித்து இருப்பதாகவும் உணவு தர நிர்ணய அமைப்பு செய்திகள் வெளியிட்டுள்ளன. விரைவில் பாகிஸ்தான் முழுவதும் உணவு பஞ்சம் தொடர்பான பிரச்சனை தலைதூக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.