
மே 17, லண்டன் (World News Tamil): உடலியல் விஷயங்களை ஆண்களை விட பெண்கள் அதிகம் வெட்கம் கொள்கின்றனர். அதே நேரத்தில், சரும பாதுகாப்பை உறுதி செய்தல் உட்பட பல்வேறு விஷயங்களில் பெண்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். குறிப்பாக பிரிட்டிஷ் பெண்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான பெண்கள் தங்களின் துணை முன்பு நின்று ஆடை மாற்றுவது, அவர்களின் முன் ஆடை இன்றி தோன்றுவது போன்ற விஷயங்களால் வெட்கப்படுகின்றனர் அல்லது அவ்வாறான செயல்களை தவிர்க்கின்றனர் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஒருசில பெண்கள் இதனை சங்கடமான உணர்வாகவும் கருதுகின்றனர். 4 Year Old Boy Dies: 4 வயது சிறுவனின் அந்தரங்க உறுப்பில் காயம்.. ஆசிரியர்கள் தாக்கியதில் துடிதுடிக்க நேர்ந்த சோகம்.!
ஆடையின்றி தோன்றுதல்:
சருமத்தின் மீதான பாதுகாப்பின்மை, உடலியல் தன்னம்பிக்கை குறைவு, வெட்கம் வரும்போது கண்ணாடியை தவிர்ப்பது போன்ற விஷயங்களை எதிர்கொள்கின்றனர். பெரும்பாலான பெண்கள் இவ்வாறான நிலை தங்களை மோசமாக உணர வைப்பதாகவும் கூறியுள்ளனர். சுமார் 35% பெண்கள் தாங்கள் காதல் கொண்ட நபரின் முன்பு ஆடையின்றி தோன்றுவது குறித்து கவலையில் இருக்கின்றனர். முகப்பரு, உடலில் இருக்கும் பிற பிரச்சனை, தோல் பிரச்சனை காரணமாக அவர்கள் இவ்வாறான நிலையை எதிர்கொள்கின்றனர்.
மனஅழுத்தம் ஏற்படுவதாக புகார்:
இவ்வாறான விஷயங்களை விரும்பாத பெண்கள் திடீரென தனது துணை ஆடை மாற்றும்போது வந்தால் மனஅழுத்தத்தையும் எதிர்கொள்கின்றனர். இதனால் பதற்றம் உண்டாகிறது. இங்கிலாந்தில் தோல் அலர்ஜியால் பெண்கள் பாதிக்கப்பட்டு முகப்பரு போன்றவையுடன் இருந்தால் தங்களின் துணையுடன் தனிமை நேரத்திலும், ஆடை மாற்றும் போதும் சங்கடமான சூழலை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. முகப்பரு போன்ற சிறிய விசயனலுக்கு கூட டேட்டிங் தவிர்த்தல், ஷாப்பிங் தவிர்த்தல், நைட் அவுட்டிங் செல்லாமல் இருப்பது போன்றவற்றை பெண்கள் கடைபிடிக்கின்றனர்.