மே 27, அமெரிக்கா (World News): மேலை நாடுகளில் சர்வதேச அளவில் கவனிக்கப்படும் அமெரிக்காவில், போவாசன் வைரஸ் (Powassan Virus) உயிர்கொல்லி வைரஸாக கருதப்படுகிறது. இது பெரும்பாலும் மான், பன்றி, அணில் போன்ற விலங்குகளின் உடலில் இருக்கும் உண்ணிகளால் பரவுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேற்கூறிய காட்டு விலங்குகளின் உண்ணிகள் மனிதர்களை கடிக்கும் பட்சத்தில் Powassan Virus பரவுகிறது.
சமீபத்தில் போவாசன் வைரஸை ஆபத்தானது என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) அறிவித்தது. போவாசன் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துவிட, நடப்பு ஆண்டின் முதல் போவாசன் வைரஸ் பதிப்பாக இவை உறுதி செய்யப்பட்டுள்ளன. இவ்வகை வைரஸ் நோய்தொற்று அரிதானது என்றாலும் அமெரிக்கா, கனடா, ரஷியாவில் இவை தற்போது அதிகரித்துள்ளன.
கடந்த 2015ம் ஆண்டில் இருந்து 20 பேருக்கு பாதிப்பு மட்டுமே உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டுகளில் 2 இறப்புகள் உறுதி செய்யபட்டுள்ளது. அமெரிக்காவை பொறுத்தமட்டில் ஆண்டுக்கு 25 பேர் போவாசன் வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது ஏற்படும் மரணங்கள் சுகாதார துறை அதிகாரிகளை கவலையடைய செய்துள்ளது. Floating Nuclear Power Plant: மிதக்கும் அணுமின் நிலைய தொழில்நுட்பத்தை நட்பு நாடுகளுக்கு வழங்க தயாராகும் ரஷியா.!
அமெரிக்கா நோய்கட்டுப்பாட்டு மையத்தின் ஆய்வுப்படி மான், பன்றி, அணில் ஆகியவற்றின் உண்ணிகளால் போவாசன் வைரஸ் பரவி வருகிறது. இவை அங்குள்ள வடகிழக்கு மற்றும் கிரேட் லேக் பகுதிகளில் காணப்படுகிறது. வசந்த காலத்தில் தொடங்கும் இதன் பாதிப்பு இலையுதிர் காலத்தின் நடுப்பகுதி வரை நீடிக்கிறது. இவ்வாறான சமயத்தில் உண்ணிகளும் சுறுசுறுப்புடன் இயங்கும்.
போவாசன் வைரஸ் அறிகுறியாக தொடக்கத்தில் காய்ச்சல், வாந்தி, பலவீனமான உணர்வு போன்றவற்றை கூறுகின்றனர். இந்த வைரஸை சரிவர கவனித்து சிகிச்சை எடுக்காத பட்சத்தில் மூளையில் நோய்த்தொற்றை உண்டாக்கி, மூளைக்காய்ச்சல் உண்டாகி மரணம் ஏற்படலாம். சில நேரங்களில் பேசுவதில் சிரமம் உட்பட வலிப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இதனை கண்டறிய மருத்துவரை சந்தித்து உடல்நல பரிசோதனை செய்துகொள்ளலாம். இவ்வகை வைரசுக்கு சரியான நோயெதிர்ப்பு மருந்து இல்லாத நிலையில், அவ்வப்போது மேற்கொள்ளப்படும் ஆய்வுக்கேற்ப மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இவ்வகை வைரஸ் தாக்கினால் ஓய்வு முக்கியமானதாகவும், திரவ வகை உணவையும் பரிந்துரைக்கின்றனர்.