Helmet (Photo Credit: Pixabay)

மார்ச் 22, புதுடெல்லி (New Delhi): அனைத்து ரக வாகனங்களும், முக்கிய பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்படுகின்றன. எனினும், ஒருசில பாதுகாப்பு நடவடிக்கைகளை நாமும் மேற்கொள்வது நல்லது. அந்தவகையில் பைக், ஸ்கூட்டரில் செல்லும் போது ஹெல்மெட் (Helmet) அணிவது பல்வேறு பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க வழி வகுக்கிறது. ஆனால், எத்தகைய ஹெல்மெட் வாங்க வேண்டும் என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கிறது. எனவே தலைக்கு கூடுதல் பாதுகாப்பு தருவதற்குத் தான் ஹெல்மெட். அதை உணர்ந்து தயாரிக்கப்பட்ட ஹெல்மெட்டை, தங்களது தலையின் அளவுக்குப் பொருத்தமாக உள்ளதா? என்பதை அறிந்து வாங்குவது தான் நல்லது.

பெரிதாக இருந்தால், திடீரென இறங்கி கண்களை மறைக்கும் ஆபத்து உண்டு. அவ்வாறு இறங்கிவிடக்கூடாது என்று சமப்படுத்திக் கொண்டே வாகனம் ஓட்டினால், சீக்கிரமே கழுத்துவலி வந்துவிடும். விபத்து நேரத்தில் தனியே கழன்று ஓடிவிடும் ஆபத்தும் உண்டு. iQOO Neo 9 Pro Launched In India: ஒன்பிளஸ், மோட்டோரோலாக்கு வந்த சவால்.. "நானும் களத்தில் இருக்கேன் டா" எனக் குதித்த ஐக்யூ நியோ 9 ப்ரோ..!

நீங்கள் வாங்கும் தலைகவசத்தில் அரசு தரச் சான்றிதழான ஐ.எஸ்.ஐ முத்திரை இடம்பெற்றுள்ளதா என்பதை பார்து உறுதி செய்ய வேண்டும். ஹெல்மெட் வாங்கிய பிறகு, அதில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அதை இந்திய தர நிர்ணய ஆணையத்திற்கு (Authority of Indian Standards) தெரிவிக்க வேண்டும் அல்லது www.bis.org.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.

விலை எவ்வளவு என்பதை மட்டுமே பிரதானமாக யோசிக்காமல், தங்கள் தலைக்கு அது பொருந்துகிறதா? என்று பார்த்து வாங்க வேண்டும். அதாவது தலையோடு தொடர்பில்லாத அளவுக்குப் பெரிதாக இருப்பதையோ, மிகக் கஷ்டப்பட்டு தலைக்குள் நுழைக்க வேண்டி இருப்பதையோ தேர்வு செய்யக் கூடாது. ஹெல்மெட்டின் முன்பகுதி கண் புருவத்துக்கு ஒரு அங்குலம் (அதாவது இரண்டு விரல் கனம்) மேலே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கண் களை மறைக்கிற பிளா ஸ்டிக் கண்ணாடியானது, தெளிவாகப் பார்க்கும் வகையிலும், தேவைப்படும்போது மடக்கி விட்டால் நிற்பதாகவும் இருக்க வேண்டும். காவல் துறையினரை ஏமாற்றுகிறோம் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.