அக்டோபர் 25, சென்னை (Chennai News): இந்தியாவை சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனம். தமிழக தலைநகர் சென்னையை (Chennai) தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் லாரி மற்றும் பேருந்துகள் போன்ற வர்த்தக வாகனங்களின் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் பேருந்துகளை இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளின் போக்குவரத்து கழகங்களும் பயன்படுத்தி வருகின்றன. MTC Conductor Killed: அரசுப்பேருந்து பயணத்தில் தகராறு; வாக்குவாதம் முற்றியதில் நடத்துனர் அடித்துக்கொலை.. சென்னையில் பயங்கரம்.!
இந்நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனம் 500 எலக்ட்ரிக் பேருந்து ஆர்டர்களை சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகத்திலிருந்து (MTC) பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 500 மின்சாரப் பேருந்துகளின் வரிசையில் 400 பேருந்துகள் ஏசி இல்லாத பேருந்துகளாகவும், 100 பேருந்துகள் ஏசி ஆகவும் இருக்கும். இந்த பேருந்துகளில் ஒரே நேரத்தில் 37 பயணிகளும், 24 பயணிகள் நின்று கொண்டும் பயணிக்க முடியும். SWITCH EiV12 வலுவான 650V மின்சார கட்டமைப்பால் இயக்கப்படுகிறது. அத்துடன் IP67-பேட்டரிகளைக் கொண்டுள்ளது. இந்த பேருந்துகள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர்கள் தடையின்றி பயணிக்க முடியும். முதலாவதாக, பெரும்பூர், பெரும்பாக்கம், பூந்தமல்லி, வியாசர்பாடி, தண்டையார்பேட்டை மற்றும் கே.கே.நகர் உள்ளிட்ட ஆறு முக்கிய டெப்போக்களில் சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவுள்ளது.