ஏப்ரல் 08, சென்னை (Chennai): அனைத்து ரக வாகனங்களும், முக்கிய பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்படுகின்றன. எனினும், ஒருசில பாதுகாப்பு நடவடிக்கைகளை நாமும் மேற்கொள்வது நல்லது. அந்தவகையில் பைக், ஸ்கூட்டரில் செல்லும் போது ஹெல்மெட் (Helmet) அணிவது பல்வேறு பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க வழி வகுக்கிறது. பொதுவாக ஏத்தர் (Ather) நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் ஏத்தர் ரிஸ்ட்டா என்ற ஃபேமிலி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டருடன் ஹாலோ என்ற ஸ்மார்ட் ஹெல்மெட்டையும் (Halo Smart Helmet) அறிமுகப்படுத்தியுள்ளது. ISRO's Aditya-L1 to Track Sun: "மிஸ் பண்ணிராதீங்க.. அப்றம் 20 வருஷம் கழிச்சு வருத்தப்படுவீங்க.." இன்றைய சூரிய கிரகணத்தை ட்ராக் செய்யப் போகும் இஸ்ரோ..!
சிறப்பம்சங்கள்: இந்த ஸ்மார்ட் ஹெல்மெட்டில் ஆட்டோ வியர் டிடெக்ட் டெக்னாலஜி பொருத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஹெல்மெட் சரியாக போடப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்து எச்சரிக்கும். மேலும் ஹெல்மெட் உள்ளே ஓடும் மியூசிக் மற்றும் கால்களை ஸ்கூட்டரின் டேஷ்போர்டு ஸ்கிரீனிலேயே கண்ட்ரோல் செய்ய முடியும். ஹெல்மெட் அணிந்து செல்பவர்கள் பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக வெளியில் உள்ள ஹாரன் சத்தம் உள்ளிட்ட சில முக்கியமான சத்தங்கள் ஹெல்மெட் உள்ளே கேட்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்டிற்கு ரூபாய் 12,999 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட் எல்லாம் ஐஎஸ்ஐ மற்றும் டிஓடி தரச்சான்றுபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Get a good look at our new smart helmet - #AtherHalo.
Here’s some of what we love about it:
- sound by Harman Kardon
- Auto WearDetect
- hassle-free wireless charging
To know more about Halo, visit https://t.co/bOrOg1rwLZ#Ather #SmartHelmet #NewLaunch pic.twitter.com/EI4xjFdzIV
— Ather Energy (@atherenergy) April 7, 2024