ஜூன் 04, புதுடெல்லி (New Delhi): பிகாஸ் என்ற நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது வாகனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த பல்வேறு வாடிக்கையாளர்களை ஈர்க்க புதிதாக ஆர்யூவி 350 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது. வரும் 25ஆம் தேதி இந்த ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Kallakurichi Accident: உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து.. 2 பேர் பலி.. 6 பேர் படுகாயம்..!
பிகாஸ் நிறுவனத்தின் இந்த ஆர்யூவி 350 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போல 16 இன்ச் அலாய் வீலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் மிகப்பெரிய ஃப்ளோர் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பு டி-15 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதால் அதில் உள்ள அதே 3.2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் இதிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.