ஜூன் 28, பெங்களூர் (Bangalore): கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள 'ஆர்ட் ஆஃப் லிவிங் இன்டர்நேஷனல் சென்டர்' (Art of Living International Center)-இல், இ-பைக்-கோ (eBikeGo) நிறுவனம், தனது சமீபத்திய தயாரிப்பான முவி 125 5ஜி (Muvi 125 5G) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் வெளியீடு செய்துள்ளது. Kanguva Release Date Announced: கங்குவா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.. துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்..!
சிறப்பம்சங்கள்: இந்த ஸ்கூட்டரில் சக்திவாய்ந்த 5 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீட்டருக்கும் மேல் பயணிக்க முடியும். மேலும் மூன்று மணி நேரத்திற்குள்ளாகவே பூஜ்ஜியம் சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை ஏற்றிவிட முடியும். அதுமட்டுமின்றி இந்த ஸ்கூட்டரில் ஸ்மார்ட் எல்இடி டிஜிட்டல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, மொபைல் ஆப் இணைப்பு வசதியும் இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் தற்போது வெளியீடு மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இ-பைக்-கோ இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.