நவம்பர் 11, புதுடெல்லி (New Delhi): உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சிகளில் ஒன்றான இஐசிஎம்ஏ 2024 (EICMA 2024) இத்தாலியில் உள்ள மிலன்-இல் சமீபத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சியைப் பயன்படுத்தி வாகன உற்பத்தியாளர்கள் பலர் வருங்கால தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தினர். அந்தவகையில், தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு (Royal Enfield)-ம் வாகன கண்காட்சியில் புதுமுக இரண்டு சக்கர வாகன மாடல்கள் சிலவற்றை காட்சிப்படுத்தியது. Agriculture Tips: பயிர்கள் வளர்ச்சிக்கான சூப்பர் டிப்ஸ்.. யூரியாவிற்கு பதில் தயிர் கலவை.. விபரம் உள்ளே.!
ஃப்ளையிங் ஃப்ளியா (Flying Flea): ஃப்ளையிங் ஃப்ளியா சி6 மற்றும் ஃப்ளையிங் ஃப்ளியா எஸ்6 என்கிற இரண்டு மாடல்களை இந்த பெயரில் நிறுவனம் காட்சிப்படுத்தியது. இதுவே நிறுவனத்தின் முதல் மின்சார பைக் மாடல் ஆகம்.
ஹிமாலயன் எலெக்ட்ரிக் பைக் (Electric Himalayan): அட்வென்சர் (ADV) பயன்பாட்டு வசதிக் கொண்ட மோட்டார்சைக்கிள்களில் ஹிமாலயன்-ம் ஒன்றாகும். இந்த பைக்கின் எலெக்ட்ரிக் வெர்ஷனையே ராயல் என்பீல்டு இஐசிஎம்ஏ 2024-இன் 2வது நாளில் வெளியீடு செய்தது.