BGauss RUV350 (Photo Credit: @carandbikehindi X)

பிப்ரவரி 05, புதுடெல்லி (Automobile News): பெட்ரோல் விலை அதிகரிப்பும், பட்ஜெட்டுக்குள்ளான விலையாக இருப்பதாலும் இ மோட்டார் பைக்குகள் விற்பனை அதிகரித்து வருகிறது. அதனுடன் தற்போது நமது நாட்டில் லித்தியம் இருப்பது கண்டறியப்பட்ட பின் பலரும் எதிர்காலத்தில் இதை வாங்க முன்வருகின்றனர். இந்த வகையான வாகன பயன்பாடு அதிகரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும். அதிக அளவில் பெட்ரோலை இறக்குமதி செய்யவதும் குறையும். இதனால் மின்சார வாகனம் வாங்குவதை ஊக்குவிக்க அரசுகளும் பல்வேறு மானியங்களை வழங்கி வருகிறது. மானியங்களாலும், பட்ஜெட்டிற்குள்ளாக இருக்கிறது என்றாலும் கூட இதன் அம்சங்கள் மற்றும் பயன்பாடு செயல்திறனை அறிந்த பின்பு இ பைக்குகளுக்கு மாறலாம்.

இ-பைக் பேட்டரிகள் (Electric Bike):

மின்சார வாகனங்கள் பெரும்பாலும் லித்தியம் அயன் பேட்டரியை கொண்டவையாகும். மொபைல்களுக்கு சார்ஜ் ஏற்றுவது போல் எலக்ட்ரிக் வாகனங்களும் சார்ஜ் செய்து பயன்படுத்த வேண்டும். சார்ஜிங் நேரமும் நீடிக்கும் தன்மையும் வாகனங்களைப் பொருத்து மாறும். இபைக் வாங்குவதற்கு முன் அதில் பயன்படுத்தும் பேட்டரிகளை பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். லித்தியம் அயன் வகைகளில் LFP (lithium iron phosphate) மற்றும் NMC (lithium nickel manganese cobalt) வகைகளே பைக்கில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதிலும் பலவகைகள் உண்டு. பேட்டரியில் எவ்வளவு சதவீதம் நிக்கல், மாங்கனீசு, கோபால்ட் அளவு உள்ளதோ அதைப் பொருத்து பேட்டரியின் செயல் தன்மை மாறும். கோபால்ட் அதிகமாக இருந்தால் அந்த பேட்டரியின் செயல்திறனும், விலையும் அதிகமாக இருக்கும். FD Vs RD: ஃபிக்ஸட் டெபாசிட் Vs ரெக்கரிங் டெபாசிட்.. யார் எதை தேர்வு செய்யலாம்?!

NMC பேட்டரிகள்:

NMC பேட்டரிகள் அதிக எனெர்ஜி டென்சிட்டி கொண்டவையாகும். இது LFP பேட்டரியை விட சிறந்ததாகும். எனெர்ஜி டென்சிட்டி என்பது பேட்டரியின் எடையைப் பொருத்து அதன் செயல்திறன் வெளிப்பாட்டின் அளவைப் பொருத்தது. இந்த NMC பேட்டரிகள்குறைந்த எடையில் அதிக செயல் திறனைக் கொண்டிருக்கும். இருப்பினும் குறைந்த அளவில் அதிக எனர்ஜியை வெளிப்படுத்துவது, வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் உண்டாக்கும்.

LFP பேட்டரி:

LFP பேட்டரி இது குறைந்த எனெர்ஜி டென்சிட்டி கொண்டது. இது குறைந்த செயல்திறனைக் கொண்டதாக இருப்பினும் வெடிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. LFP பேட்டரி பாதுகாப்பானது. அதனால் இதன் விலை இயல்பாகவே அதிகமாக இருக்கும். NMC பேட்டரிகளின் டெம்பரேச்சரை கண்காணித்து வர வேண்டும். அதிக வெப்பநிலை அடைந்தால் அதை மாற்றிவிடாலம். இதற்காக பயப்படதேவையில்லை.

பேட்டரிகளின் லைஃப் சைக்கிள் (ஒரு முறை சார்ஜ் செய்து டிஸ் சார்ஜ் ஆவது) அதன் ரேன்ஞ் பொருத்தும், சார்ஜ் செய்யும் அளவைப் பொருத்தும் மாறுபடும். குறைவான லைஃப் சைக்கிளில் அதிக ரேன்ஞ் தரும் இ பைக்குகள் சிறந்தது. பைக் வாங்குவதற்கு முன் வாரண்டிக்கு தரும் ரேஞ்ஜ், டிஃபால்டாக இருக்கும் ரேஞ்ஜை விட அதிகமாக இருக்கிறதா என தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆப்ரேட்டிங் டெம்பரேஜர்:

மின்சார பைக்குகள் வாங்குவதற்கு முன் ஆப்ரேட்டிங் டெம்பரேஜரைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் இருக்கும் வெப்பனிலையை விட சற்று அதிகமான வெப்பத்தை தாங்கும் பேட்டரிகளா என பார்த்து வாங்க வேண்டும். மேலும் பேட்டரிகள் நீடிக்கவும், பேட்டரி உப்பாமலும் இருக்க, ஆப்பரேட்டிங் டெம்பரேஜை தாண்டாமல் பைக்குகளை பயன்படுத்த வேண்டும். சில வாகனங்களில் வெப்பனிலையை அதுவே காட்டுவது போன்று வடிவமைக்கப்படுகிறது. அவ்வாறு இல்லையெனில் தனியாக வெப்பத்தை கண்காணிக்க டெம்பரேஜர் மானிட்டரை வாங்கிப் பொருத்திக் கொள்ளலாம். மின்சார வாகனங்கள் வெடிக்கின்றன என அச்சப்பட தேவையில்லை. பெட்ரோல் வாகனங்களும் வெடிக்கத்தான் செய்கின்றன. வாகனங்களை முறையாக கையாண்டால் எவ்வித ஆபத்துமின்றி பயன்படுத்தலாம். IRCTC Cancellation Charges: ரயில் டிக்கெட் கேன்சல் பண்ணுனா எவ்ளோ பணம் கிடைக்கும்? விபரம் உள்ளே.!

பலரும் மின் வாகனங்கள் வாங்க தயக்கப்படுவதற்கு காரணம் வண்டி இடையில் சார்ஜில்லாமல் நின்றுவிட்டால், பெட்ரோல் வாகனங்களைப் போல் ஆங்காங்கு சார்ஜிங் ஸ்டேசன் இல்லை என்றுதான். ஆனால் இ வாகனங்களின் பயன்பாடு அதிகப்பாதால் சார்ஜிங் ஸ்டேசன்கள் பல இடங்களில் நிறுவப்பட்டு வருகிறது. அதனால் பயமின்றி மின் வாகனங்களுக்கு மாறலாம். அதிலும் குறிப்பிட்ட தூரத்திற்கு என்று தினமும் வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இது சிறந்ததாக இருக்கும்.

16 வயது பூர்த்தியடைந்தவர்கள், முறையான கற்றல் ஓட்டுநர் உரிமம் பெற்று 55சிசி செயல்திறன் கொண்ட, கியர் இல்லாத வாகனங்களை ஓட்ட இந்தியாவில் அனுமதி உள்ளது. அவர்களுக்கு பள்ளி கல்லூரி செல்ல இந்த வாகனம் சிறந்ததாக இருக்கும்.