நவம்பர் 06, புதுடெல்லி (New Delhi): நமது வாகனங்கள் மீது காப்பீடு செய்து வைப்பது, விபத்து, இயற்கை பேரிடரில் கார் பைக்குகளுக்கு ஏற்படும் சேதத்திற்காக குறிப்பிட்டத் தொகையை பெற வழிக்கும் பாலிசியாகும். இதற்கு பாலிசிதாரர்கள் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்டத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் செலுத்தவேண்டும். இந்த தொகையால் நிறுவனமும், பாலிசிதாரரும் பயனடையும் விதத்தில் பே அஸ் யூ டிரைவ் என்ற காப்பீட்டுத் திட்டத்தை இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அனுமதி அளித்துள்ளது. 25 Tigers Missing: 25 புலிகள் மாயம்.. தேசிய பூங்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
வாகனத்திற்கான இன்சூரன்ஸ் பிரீயம் என்பது அதன் மைலேஜ் மற்றும் வாகனத்தின் தரத்தை பொறுத்தது. இந்த திட்டத்தில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காரின் பயன்பாட்டின் அடிப்படையில் பிரீமியத் தொகையை வசூலிக்கும். Pay as you drive என்ற காப்பீட்டு திட்டத்தின் கீழ் கார் பயணிக்கும் மொத்த கிலோ மீட்டர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, எவ்வளவு தூரம் பயன்படுத்தப்படுகிறது என்பதன் அடிப்படையில் பிரீமியம் தொகையை செலுத்தலாம். பாலிசிதாரர் தேர்ந்தெடுக்கும் வரம்பு வரை மட்டுமே காப்பீடு செல்லும். இதற்காக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 7,500 கிமீ, 5,000 கிமீ மற்றும் 2,500 கிமீ என மூன்று பிரிவுகளை வழங்குகிறது.மேலும் காப்பீட்டைப் புதுபிக்கும் போதும் கூடுதல் தள்ளுபடிகள், தேய்மானத்தை கணக்கில் கொள்ளாத முழு காப்பீடு, ரோட் சைட் அசிஸ்டண்ட், இன்ஜினுக்கான பாதுகாப்பு போன்ற சலுகைகளும் இத்திட்டத்தில் இடம்பெறுகிறது. தற்போது முன்னனி வாகன காப்பீடு நிறுவனமான நியூ இந்தியா, இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.