
பிப்ரவரி 13, சென்னை (Chennai News): கோடைகாலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிக்கனம், மற்றும் இயக்கத்தில் நன்மை ஆகிய காரணங்களால் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் லித்தியம் இருப்பது கண்டறியப்பட்டதால் வருங்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்களின் தேவை அதிகரிக்கும் என கருத்துக்களும் நிலவி வருகிறது. இருப்பினும் பலருக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் தீ பிடிக்கும் என்ற அச்சமும் இருக்கிறது. இதனால் இந்த வகை வாகனங்கள் இரண்டாம் தேர்வாகவே உள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்கள் தீ பிடிப்பது பேட்டரிகளால் தான். பைக்குகளில் இருந்த லித்தியம் - அயோன் பேட்டரிகள் தானாக தீப்பிடிப்பதில்லை. அதை அவை அதிக வெப்பமாக மாறுவதால் மட்டுமே தீப்பற்றுகிறது. எனவே பேட்டரி சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். Rental Agreement: வீட்டு வாடகை ஒப்பந்தம் போடுவது ஏன்? கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!
கோடையில் எலக்ட்ரிக் பைக்குகள் தீபற்றாமல் இருக்க:
- வீட்டிற்குள் வைத்து சார்ஜ் செய்யக் கூடாது. காற்றோடமான இடத்தில் அல்லது காலியிடங்களில் வைத்து கண்காணிப்பிலேயே சார்ஜ் செய்ய வேண்டும்.
- கிடைத்த சார்ஜரைப் பயன்படுத்தி சார்ஜ் போடக்கூடாது. வாகனங்களுக்கு என வழங்கப்பட்ட அதற்குரிய சார்ஜரைத் தான் பயன்படுத்த வேண்டும்.
- தெரிந்த விதத்தில் பயன்படுத்தாமல் வழிமுறைகளைப் பயன்படுத்தி சார்ஜ் செய்ய வேண்டும். சார்ஜ் முழுதும் ஏறியும் பல மணி நேரம் கழித்து சார்ஜிங்கிலேயே வைப்பது பேட்டரியை சூடுபடுத்தும்.
- பேட்டரிகளின் வெப்பனிலையை ஆப்ரேட்டிங் டெம்பரேஜரை வைத்து அவ்வப்போது கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
- எலக்ட்ரிக் வாகனங்கள் அதிக நேரம் வெயிலில் இருக்குமாறு வைத்தால் வாகனம், பேட்டரி சூடாகி வெடிக்கும் அபாயம் உள்ளது. லித்தியம் அயோன் பேட்டரி வெயிலில் விரைவில் சூடாகிவிடும்.
- விரைவில் சூடாகும் அல்லது தீப்பற்றும் இடங்களிலோ அல்லது பொருட்களின் பக்கத்திலோ அதிக நேரம் வைக்கக் கூடாது.
- பேட்டரிகள் உப்பினாலோ, நிறம் மாறினாலோ, வித்தியாசமான சத்தம் வருவது போன்று தெரிந்தால் உடனே அந்த பேட்டரியை மாற்றலாம். சரிசெய்து அதே பேட்டரியைப் பயன்படுத்துவது, செகண்ட் ஹேண்ட் பேட்டரிகளை பயன்படுத்துவது அதிக ஆபத்தை விளைவிக்கும்.
- எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கும் போது நன்கு தரமானதாக பார்த்து வாங்க வேண்டும். விலை மலிவாக இருக்கிறது என்று தரமற்ற அல்லது கவனிக்கமாலோ எந்த பொருட்களையும் வாங்க வேண்டும்.
- இந்தியா மட்டுமல்ல, நியூயார்க்கில், 2022ம் ஆண்டில் 200க்கும் மேற்பட்ட பைக்குகள் தீப்பிடித்து விபத்துக்குள்ளாயின. அதனால் எலக்ட்ரிக் பைக்குகள் பயன்படுத்துவதில் அச்சப்படத் தேவையில்லை. எலக்ரிக் பைக்குகளை சரியான வழிமுறைப் பின்பற்றி கையாண்டால் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நீண்ட நாட்களுக்கும் உழைக்கும்.