ஜனவரி 20, சென்னை (Automobile News): மக்களிடயே எலக்ரிக் வாகனத்தின் மீதான ஆர்வத்தாலும், மலிவான விலையாலும் எலக்ரிக் இரு சக்கர வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. நாட்டில், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், காற்று மாசுவை கட்டுப்படுத்தவும், மின்சார வாகன விற்பனை ஊக்குவிக்க மத்திய மாநில அரசுகள் ஊக்கத் தொகை, மானியம் என பல முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அதில் மின்சார வாகன உற்பத்தியை உயர்த்தும் விதமாக 'பேம் - 2' (FAME 2) என்ற மானியம் வழங்கப்படுகிறது. இது இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு நிபந்தனைகளுடன் வழங்கப்படுகிறது. FAME 2 (இந்தியாவில் மின்சார வாகனங்களின் விரைவான தத்தெடுப்பு மற்றும் உற்பத்தி) திட்டம் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பொருந்தும். Contact Lens Care: லென்ஸ் அணிபவர்களின் கவனத்திற்கு.. நம் கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள்..!
தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான FAME 2 மானியத்தின் விவரங்கள்:
மின்சார இருசக்கர வாகனங்களுக்கு (For electric two-wheelers): அதிகபட்சமாக மணிக்கு 40 கிமீ வேகத்தில் செல்லும் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு 5,000 ரூபாய் மானியமும், அதிகபட்சமாக 45 கிமீ வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு 10,000 ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது.
மின்சார மூன்று சக்கர வாகனங்களுக்கு (For electric three-wheelers): மின்சார மூன்று சக்கர வாகனங்களுக்கு 50,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
மின்சார நான்கு சக்கர வாகனங்களுக்கு (For electric four-wheelers): மின்சார கார்கள் மற்றும் மின்சார பேருந்துகளுக்கான மானியம் வாகனத்தின் வகை மற்றும் அளவைப் பொறுத்தது. எலெக்ட்ரிக் கார்களுக்கு, ஒரு கிலோவாட் பேட்டரி திறனுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மின்சார பஸ்களுக்கு, 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
இம்மானியத்தை பயன்படுத்தி ஒருவரால் ஒரு முறை மட்டுமே எலக்ரிக் வாகனம் வாங்க முடியும். நீங்கள் வாங்க நினைக்கும் வாகனம் FAME-ல் மானியம் கிடைக்கும் தகுதியுடையதா எனப் பார்த்து வாங்கவும். எந்த நிறுவனத்தின் வாகனங்கள் மற்றும் அதன் மாடல், பேட்டரி திறனைப்பொருத்து மானியத்தின் தொகை மாறுபடும். இதன் விவரங்களை FAME இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.