
பிப்ரவரி 23, சென்னை (Chennai News): ரேடியோ ஜாக்கி, திரைப்பட நடிகர், சின்னத்திரை நடிகர் என பன்முகத்தை கொண்டவர் செந்தில் என்ற மிர்சி செந்தில் (Mirchi Senthil). விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் உட்பட பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர், தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா என்ற நெடுந்தொடரில் நடித்து வருகிறார். தமிழ் மொழியில் வெளியான தவமாய் தவமிருந்து, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகிய படங்களிலும் இவர் நடித்துள்ளார். Suzhal 2 Official Trailer: கிரைம் தில்லரில் மிரளவைக்கும் காட்சிகள்.. ஓடிடியில் வெளியாகும் சுழல் 2 ட்ரைலர் இதோ.!
ரூ.15000 இழந்த நடிகர்:
இதனிடையே, சைபர் கிரைம் மோசடி குற்றச்செயலில் ஈடுபடும் நபர் ஒருவர், நடிகர் செந்திலின் நண்பருடைய வாட்சப்பை ஹேக்கிங் செய்து பணம் பறித்து மோசடி செயலில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. இதனால் அவர் மட்டும் ரூ.15,000 பணத்தை இழந்துள்ள நிலையில், அவரசரத்தில் பணத்தை அனுப்பியதாக நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்த இன்ஸ்டாகிராம் பதில் அவர் பேசிய காணொளியும் வெளியாகியுள்ளது. Sabdham Official Trailer: "செத்ததுக்கு அப்புறமும் வாழ்க்கை இருக்கு" - ஆதி, லட்சுமி மேனனின் நடிப்பில் மிரளவைக்கும் சப்தம்.. படத்தின் ட்ரைலர் உள்ளே.!
அவசரத்தில் அனுப்பினார்:
அந்த காணொளியில், "எனக்கு சிரிப்பதா ? அழுவதா? என தெரியவில்லை. ஒருவன் ஆன்லைனில் எளிதாக ரூ.15000 பணத்தை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டார். கோவையைச் சேர்ந்த எனக்கு தெரிந்த தொழிலதிபர் ஹோட்டல் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். அவரின் வாட்ஸப்பில் இருந்து அவசரமாக பணம் வேண்டும் என மெசேஜ் வந்தது. நானும் அவரை தொடர்பு கொண்டு பேசாமல், அவசர கதியில் எவ்வுளவு வேண்டும் என கேட்டேன். ரூ.15000 வேண்டும் என கேட்டார். நானும் அதனை அனுப்பிவிட்டேன். பின் ஒரு நொடி யோசித்து, அவருக்கு தொடர்புகொண்டபோது உண்மை தெரிந்தது. Niram Marum Ulagil Trailer: "உயிர்போகும் நேரத்திலும் உச்சரிப்பேன் அம்மா" - பாரதிராஜா, சாண்டி, நடராஜ் நடிப்பில் நிறம் மாறும் உலகில்., படத்தின் ட்ரைலர் இதோ.!
அதாவது, இன்று காலை முதல் மோசடி செய்யும் நபர், மொத்தமாக எனது நண்பரை போல 500 பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். சிலர் உண்மை என நம்பி பணமும் அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக அவர் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். உங்களுக்கு யாரேனும் வாட்ஸப்பில் தொடர்பு கொண்டு உதவி கேட்டால், அவர்களுக்கு போனில் தொடர்புகொண்டு, தகவலை உறுதி செய்து பின் அனுப்புங்கள். எக்காரணம் கொண்டும் பணத்தை முன்னதாகவே அனுப்ப வேண்டாம். உங்களின் விழிப்புணர்வுக்காக நான் ஏமாற்றப்பட்ட விஷயத்தையும் நான் உங்களுக்காக சொல்கிறேன். கவனமா இருங்கள்" என கூறினார்.
77489 14621 என்ற செல்போன் எண்ணில் ஜி பே செய்ய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த மர்ம ஆசாமியின் பெயர் ஜி பே வாயிலாக ரிஷப் யாதவன்ஷி (Rishabh Yadavwanshi) என்பதும் தெரியவந்துள்ளது.
சைபர் க்ரைம் (Cyber Crime) தொடர்பான விவகாரங்களுக்கு புகார் அளிக்க: 1930
நடிகர் தான் ஏமாற்றப்பட்ட அனுபவத்தை வருத்தத்துடன் பகிரும் காணொளி:
View this post on Instagram