நவம்பர் 27, திருப்பதி (Tirupati): இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் பெங்களுருவில் உள்ள இந்திய விமானப்படை தளத்திற்கு சென்று, மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்தார். முதல் முறையாக தேஜஸில் பயணம் செய்த பிரதமர் என்ற பெருமையையும் இதன் வாயிலாக பிரதமர் அடைந்தார்.
அதனைத்தொடர்ந்து, தெலுங்கானா மாநிலத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கானா மாநில மக்களிடையே உரையாற்றினார். தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். Hostage Maya Regev: ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தி விடுவிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்: கண்ணீரில் குடும்பத்தினர்.!
இந்நிலையில், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி, திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்தார். நெற்றியில் நாமத்துடன், வேட்டி-சட்டையுடன் பிரதமர் மோடி திருப்பதி வெங்கடாசலபதியை வணங்கி இருந்தார்.
140 கோடி இந்திய மக்களின் நல்ல உடல் ஆரோக்கியம், நலமான வாழ்வு, வளர்ச்சிக்காக தான் பிரார்த்தனை செய்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். 2024ல் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் சட்டப்பேரவை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.