ஏப்ரல் 19, போயஸ் கார்டன் (Cinema News): 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதியான இன்றில் தொடங்கி, 7 கட்டமாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் வாக்குபதிவில் தமிழ்நாடு (Lok Shaba Elections 2024), புதுச்சேரி மாநிலங்களுக்கு இன்று ஒரேகட்டமாக நடைபெறுகிறது. காலை முதலாக மக்களும், அரசியல்கட்சி பிரமுகர்களும், திரைத்துறை பிரபலங்களும் நேரில் வந்து தங்களின் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். Siva & Aarthi Casted Vote: தனது மனைவியுடன் ஜனநாயக கடமையாற்றிய நடிகர் சிவகார்த்திகேயன்; வாக்காளர்களுக்கு அறிவுரை.! 

ஜனநாயக கடமையாற்றிய ரஜினிகாந்த் (Rajinikanth): இந்நிலையில், தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார், இந்திய திரையுலகின் அடையாளங்களில் ஒருவராகவும், உச்ச நட்சத்திரமாகவும் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் இந்தியா தேர்தல்கள் 2024 க்காக தனது வாக்குகளை பதிவு செய்தார். Ajith Kumar Casted his Vote: முதல் ஆளாக வந்து ஜனநாயக கடமையாற்றிய தல அஜித்; செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்.! 

ரசிகர்களுக்கு முன்மாதிரியாக முதல் ஆளாக வாக்களித்த திரைத்துறை பிரபலங்கள்: முன்னதாக நடிகர் அஜித் குமார் (Ajithkumar Casted his Vote) திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்திலும், சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்திலும் அடுத்தடுத்து வாக்குகளை பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.