Vijay Antony Romeo Movie (Photo Credit: @VijayAntony X)

ஏப்ரல் 20, சென்னை (Cinema News): அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் ஆண்டனி, தலைவாசல் விஜய், மிருணாளினி ரவி, சுதா, ஸ்ரீஜா ரவி, யோகிபாபு, விடிவி கணேஷ், இளவரசு உட்பட பலர் நடிக்க உருவாகிய திரைப்படம் ரோமியோ (Romeo Vijay Antony Tamil Movie). விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்து வழங்கிய இப்படத்திற்கு பரத் தனசேகர் இசையமைத்து இருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில், கடந்த 11 ஏப்ரல் 2024 அன்று படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனிடையே, திரைப்பட விமர்சகர் என நெட்டிசன்களால் வருணிக்கப்படும் நீலச்சட்டை மாறன், படத்தை பார்த்துவிட்டு படம் சரியாக இல்லை என தனது கருத்துக்களை முன்வைத்து வீடியோ வெளியிட்டதாக தெரியவருகிறது. Inga Naan Thaan Kingu: நடிகர் சந்தானத்தின் "இங்க நான் தான் கிங்கு" பட ரிலீஸ் தேதி அறிவிப்பு; விபரம் உள்ளே.! 

ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க: இது ரோமியோ படத்தின் மீதான தாக்கத்தை ரசிகர்களுக்கு மாற்றவே, நடிகர் விஜய் ஆண்டனி மாறனுக்கு எதிராக கண்டனத்துடன் கூடிய ட்விட் பதிவு செய்து இருக்கிறார். அந்த பதிவில், "பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் திரு. புளுசட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவுங்க சொல்றதையெல்லாம் உண்மை என நம்பி, ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறைசொல்லும் அறிவு ஜீவிகளுக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே, ரோமியோ ஒரு நல்ல படம், போய் பாருங்க புரியும். ரோமியோவை அன்பே சிவம் () ஆக்கிடாதீங்க" என தெரிவித்துள்ளார். US imposed Sanctions against 3 Chinese Companies: பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்க உதவிய சீன நிறுவனங்களுக்கு தடை; அமெரிக்கா உத்தரவு.!

அன்பே சிவம் பற்றி சுருக்கமாக: கடந்த 2003ம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகர்கள் கமல் ஹாசன், மாதவன், கிரண் ரத்தோட், நாசர், சந்தான பாரதி, சீமா, உமா, ரியாஸ் கான் உட்பட பலர் நடிக்க பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது அன்பே சிவம் திரைப்படம் (Anbe Sivam 2003 Movie). அன்றைய காலத்திலேயே ரூ.120 கோடி செலவில் தயாரான திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி படுதோல்வி அடைந்தது. இப்படத்தின் தோல்விக்கு பின்னர், படம் சின்னத்திரையில் வெளியான பின் ரசிகர்கள் படத்தை புரிந்துகொண்டனர். இப்படம் இன்று நல்ல வரவேற்பை பெற்று, ரசிகர்களிடம் சிறந்த படம் என அடையாளப்படுத்தப்பட்டாலும் அன்பே சிவம் வெளியான சமயம் தோல்விப்படமாக இருந்தது.