Janhvi Kapoor: தேவதை போல மெதுவாக நடந்து வந்த ஜான்வி; வியந்து பார்த்த கூட்டம்.. அசத்தல் வீடியோ உள்ளே.!

தனது 21 வயதில் தாயை இழந்த ஜான்வி, சில ஆண்டுகள் கழித்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது வரை ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

Janhvi Kapoor: தேவதை போல மெதுவாக நடந்து வந்த ஜான்வி; வியந்து பார்த்த கூட்டம்.. அசத்தல் வீடியோ உள்ளே.!
Janhvi Kapoor at Fashion Shot (Photo Credit: Instagram)

அக்டோபர் 14, மும்பை (Cinema News): மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி - திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர். இவர் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். கடந்த 2018ம் ஆண்டு திரைத்துறைக்கு அறிமுகமான ஜான்வி (Janhvi Kapoor), தடக் (Dhadak) என்ற காதல் படத்தில் நடித்து பிரபலமானார்.

இந்திய விமானப்படையில் பெண் விமானியாக பணியாற்றிய குஞ்சன் சக்சேனா-வின் (Gunjan Saxena: The Kargil Girl) வாழ்க்கை திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக, அவர் பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். Samsung Galaxy A05s: சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் விற்பனை தேதி அறிவிப்பு: சாம்சங் செல்போன் விரும்பிகள் தயாராகுங்க.!

தனது 21 வயதில் தாயை இழந்த ஜான்வி, சில ஆண்டுகள் கழித்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே தற்போது வரை அவர் நடித்துள்ளார்.

கடந்த 2020ல் வெளியான கோஸ்ட் ஸ்டோரீஸ் (Ghost Stories) திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல்வேறு படங்களில் அவர் நடித்து வருகிறார். விரைவில் Mr. & Mrs. Mahi, Devara, Ulajh ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவான நடிகையான ஜான்வி, எப்போதாவது தனது போட்டோக்களையும் பதிவிடுவார். இந்நிலையில், தற்போது பேஷன் ஷோ ஒன்றில் கலந்துகொண்ட ஜான்வி கபூர், கருப்பு நிற கவர்ச்சி உடையில் தேவதை போல நடந்து வந்து பலரின் மனதை கொள்ளைகொண்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

(The above story first appeared on LatestLY on Oct 14, 2023 08:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).