Emily Ratajkowski: இதுக்கு கோட்-சூட் போடாமலே இருக்கலாம் போலியே.. நடிகை எமிலியின் அசத்தல் கிளிக் இதோ.!
Emily Ratajkowski (Photo Credit: Instagram)

ஆகஸ்ட் 12, கலிபோர்னியா (Cinema News): அமெரிக்கா தம்பதிக்கு இங்கிலாந்தில் பிறந்த அமெரிக்க நடிகை எமிலி ரடாஜ்கோவ்ஸ்கி (Emily Ratajkowski). இவர் அமெரிக்க நடிகை & மாடல் அழகியும் ஆவார். குழந்தை நட்சத்திரமாக தனது திரைவாழ்க்கையை தொடங்கியவர் இன்று நடிகை, சிறந்த நடனம் ஆடுபவர், அரசியல் ஆர்வலர், மனித உரிமை ஆர்வலர், பாலஸ்தீனிய ஆர்வலர் என பன்முகத்தை கொண்டவர் ஆவார்.

செபாஸ்டியன் பியர்-மெக்லார்ட் என்பவரை கடந்த 2018ல் திருமணம் செய்துகொண்ட நடிகை, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2022ல் பிரிந்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. எமிலி போலந்து நாட்டை சேர்ந்த தந்தைக்கும், இஸ்ரேலிய நாட்டை சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர் என்பதால், தன்னை பெரும்பாலும் பாலஸ்தீனிய ஆதரவாளராக காண்பித்துக்கொள்வார்.

கடந்த 2012-ல் அமெரிக்காவில் வெளியாகும் Treats! பத்திரிகையின் முகப்பு படத்திற்காக நிர்வாணமாக நடித்து கொடுத்திருந்தார். அதன்பின்னர் இவர் பெருமளவில் அறியப்பட்டார். அதேபோல, பாலின சமத்துவ விசயத்திற்காகவும் நடிகை எமிலி தனது குரலை பதிவு செய்து வந்துள்ளார். Virat Kohli: “எனது சமூக வலைதளபக்கங்களின் வருமானம் குறித்த தகவல் உண்மை இல்லை” – விராட் கோஹ்லி அதிகாரபூர்வ அறிவிப்பு.! 

Actress Emily Ratajkowski (Photo Credit: Instagram)

பாலியல் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தை மக்களுக்கு எவ்வித ஒளிவு மறைவுமின்றி எடுத்து செல்ல, அதற்கான குறும்படத்தில் நடித்திருந்தார். Gone Girl, I Feel Pretty, In Darkness, The American Meme உட்பட பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். 2019க்கு பின் அவர் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடித்து வருகிறார்.

இதனால் அவர் எவ்வித திரைப்படத்திலும் நடிக்கவில்லை. Ziwe, History of the World Part II ஆகிய ஆங்கில தொடர்களில் அவர் நடித்து வருகிறார். தனது வாழ்க்கையை புத்தகமாக எழுதி 2022ல் My Body என்ற பெயரில் அதனை வெளியிடவும் செய்தார். தற்போது அவர் பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் போட்டோ & வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Emily Ratajkowski (@emrata)