Vijay (Photo Credit: @tvkvijayhq X)

ஜனவரி 20, பரந்தூர் (Parandur News): தமிழகத்தில் சர்வதேச விமான நிலையமானது மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதனை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தினால் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

பரந்தூர் விமான நிலையம்:

பரந்தூர் விமான நிலையம் (Parandur Airport) அமைப்பதற்காக காஞ்சிபுரம் வட்டம் நெல்வாய் கிராமத்தில் 69.05 ஹெக்டேர் அளவிலான நிலத்தினையும், திருப்பெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் 67.13 ஹெக்டேர் நிலத்தினை கையகப்படுத்த அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. புதிய சர்வதேச விமான நிலைய அமைக்க பரந்தூர் ஏகானபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது. வானிலை: தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

மக்கள் போராட்டம் (Parandur Airport Protest):

இதனால் ஏகனாபுரம் கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இதனிடையே டிட்கோ நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டு பரந்தூர் விமான நிலையத்தின் தள அனுமதி வேண்டி விண்ணப்பித்தது. தொடர்ந்து தள அனுமதிக்கான தடையில்லா சான்றிதழை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஆண்டு வழங்கியது. பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்களுக்கும் மேலாக ஏகானாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என தீர்மானமும் நிறைவேற்றினார். அதைத்தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் இன்று பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்களை ஏகானாபுரத்தில் சந்தித்தார். தொடர்ந்து கேரவனில் வந்த அவருக்கு பூங்கொத்து கொடுத்து, பச்சைத் துண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டை கொடுத்து வரவேற்பளித்தனர். அந்த வாகனத்தில் நின்றபடியே அப்பகுதி மக்கள், தொண்டர்களிடையே பேசினார் விஜய்.

பரந்தூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு (Vijay Meets Parandur People):

அப்போது பேசிய அவர், "கிட்டத்தட்ட 910 நாளுக்கு மேல் போராடி வருகிறீர்கள். உங்களுக்காக நான் துணை நிற்பேன். ராகுல் என்ற சிறுவன் பேசிய வீடியோ என் மனதை உருக்கியது. உடனே உங்கள் எல்லாரையும் பார்க்க வேண்டும் என தோன்றியது. அதற்காக தான் இங்கு வந்தேன். வீட்டுக்கு பெரியவங்கதான் முக்கியமானவங்க, அது போல் நாட்டுக்கு முக்கியமானவங்க உங்களை போன்ற விவசாயிகள். விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டுவிட்டுதான் என் பயணத்தை தொடங்க முடிவு செய்தேன். அதற்கு இதுதான் சரியான இடம் என எனக்கு தோன்றியது. எனது கள அரசியல் பயணம் உங்கள் ஆசியுடன் இங்கிருந்து தொடங்குகிறது. Fame 2 Subsidy: மின்சார வாகனங்களுக்கான மானியம்.. 'பேம் - 2' என்றால் என்ன? விபரம் உள்ளே.!

பரந்தூரில் விமான நிலையத்தை அமைத்து, சென்னையை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் திட்டத்தை நான் எதிர்க்கிறேன். விமான நிலையம் வரக்கூடாது என நான் சொல்லவில்லை. இந்த இடத்தில் வரக்கூடாது என்றே சொல்கிறேன். வளர்ச்சிக்கு எதிரானவன் நான் அல்ல. சென்னை மழை வெள்ளத்தில் தத்தளிப்பதே, இங்குள்ள நீர் நிலைகள் அழிக்கப்பட்டதால்தான் என சமீபத்திய ஆய்வு சொல்கிறது. டங்க்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டை தானே பரந்தூர் பிரச்சினையிலும் எடுத்திருக்க வேண்டும்.

அரிட்டாபட்டி மக்கள் எப்படியோ, அப்படி தானே பரந்தூர் மக்களும். அப்படி தானே அரசாங்கம் யோசிக்க வேண்டும். ஆனால் அரசு அப்படி செய்யவில்லை. ஏன் செய்யவில்லை. ஏனென்றால், விமான நிலையத்தையும் தாண்டி இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. அது மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள். ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள்.. நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலையை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டை தானே இங்கே எடுத்திருக்க வேண்டும்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா.. எனக்கு புரியவில்லையே. இனிமேலும் உங்கள் நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள். நீங்கள் உங்களின் வசதிக்காக அவர்களோடு நிற்பதும், நிற்காமல் இருப்பதும் நாடகம் ஆடுவதும், நாடகம் ஆடாமல் இருப்பதையும் நிறுத்த வேண்டும். நம்புகிற மாதிரி நாடகம் ஆடுவதில் தான் நீங்கள் கில்லாடி ஆச்சே! விமான நிலையத்துக்காக ஆய்வு செய்த இடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுக்கு வலியுறுத்துகிறேன். Breaking: காதலனுக்கு விஷம் கொடுத்து காதலி கொலை செய்த விவகாரம்; "மரண தண்டனை" - நீதிபதிகள் தீர்ப்பு..!

வளர்ச்சி தான் மக்களின் முன்னேற்றம். வளர்ச்சியின் பெயரால் நடக்கும் அழிவு மக்களை மிக அதிகமாக பாதிக்கும். மக்கள் உங்கள் தெய்வங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்காதீர்கள். உங்களுக்காகவும், உங்கள் ஊருக்காகவும் இனி உங்க வீட்டு பிள்ளையான நானும், தவெகவும் சட்டத்துக்கு உட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களோடு உறுதியாக நிற்பேன். ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் உங்களை சந்திப்பது தான் எனது திட்டம். ஆனால், என்னை அனுமதிக்கவில்லை. நான் ஏன் ஊருக்குள் வர தடை விதிக்கப்பட்டது என்று தெரியவில்லை. இதேபோல் சில நாட்கள் முன், துண்டு சீட்டு கொடுத்ததற்கு தடை விதித்தார்கள். அதுவும் ஏன் எனத் தெரியவில்லை. நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம்.” என்றார்.

பரந்தூரில் விஜய் பேச்சு: