Tirupati Brothers | Uttamavillan (Photo Credit: @TirupatiBrothers X / AnandaVikatan X)

ஏப்ரல் 18, சென்னை (Cinema News): கமல்ஹாசனின் எழுத்துக்களில் உருவாகி, ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் தயாராகி, என்.லிங்குசாமி மற்றும் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ், சுபாஷ் சந்திர போஸின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வழங்கப்பட்ட திரைப்படம் உத்தமவில்லன் (UttamaVillan). கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் (Kamal Hassan), விஸ்வநாத், பாலச்சந்தர், ஜெயராம், ஆண்ட்ரியா, பூஜா குமார், நாசர், ஊர்வசி உட்பட பலரும் நடித்திருந்தனர். கே.பாலச்சந்திரன் மறைவுக்கு முன்பு எடுக்கப்பட்டு, மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி தோல்வி அடைந்த படமாக உத்தமவில்லன் அமைந்தது.

விருதுகளை பெற்றாலும் வருமானத்தில் தோல்வி: வணிக ரீதியாக இப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்பதால், தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் அதிருப்தி கிளம்பியது. பின் கமல்ஹாசன் மற்றும் அவரின் சகோதரரான சந்திரகாசன் ஆகியோர் சேர்ந்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு வேறு ஒரு படம் நடித்து கொடுப்பதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதுவரை அதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன எனினும், படம் தொடர்பான அறிவிப்புகள் இல்லை. இப்படம் வெளியான பின்பு லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விருது, இன்டர்நேஷனல் திரைப்பட விருது, ரஷ்யா திரைப்பட விருது என வெளிநாடுகளில் இசை, நடிப்பு உட்பட பல பிரிவுகளில் விருதுகளை குவித்தது. Teenage Girl Died: எலிக்கு வைக்கப்பட்ட விஷம் கலந்த வெல்லம் சாப்பிட்ட சிறுமி மரணம்; பெற்றோர்களே கவனமாக இருங்கள்., அலட்சிய வேண்டாம்.! 

திருப்பதி பிரதமர் நிறுவனத்தின் விளக்கம்: இந்நிலையில், உத்தம வில்லன் திரைப்படம் நல்ல வருமானம் பெற்ற திரைப்படம் என தனியார் யூடியூப் சேனலில் இயக்குநர் லிங்குசாமி பேசியதாக வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவிற்கு விளக்கம் அளித்துள்ள திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், உத்தமவில்லலன் படுதோல்வி என அறிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "தீபாவளி, பையா, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி, கோலி சோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, ரஜினி முருகன் போன்ற தரமான வெற்றி படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களை தயாரித்து வெளியிட்டுள்ள எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தான், பத்மஸ்ரீ திரு. கமல்ஹாசன் அவர்களை வைத்து முதல் பிரதி அடிப்படையில் உத்தமவில்லன் திரைப்படத்தை தயாரித்து வழங்கியது.

தோல்விப்படம் குறித்த தவறான தகவலை பரப்ப வேண்டாம்: எங்கள் நிறுவனத்திற்கு இப்படம் மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியது. இந்த விஷயம் கமல்ஹாசன் அவர்களுக்கும் நன்றாக தெரியும். உத்தமவில்லன் திரைப்படத்தில் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கு கமல்ஹாசன் மற்றும் அவரது சகோதரர் சந்திரகாசன் ஆகியோர் எங்களின் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். அதற்கு உண்டான வேலைகளிலும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சமூக வலைதளமான வலைப்பேச்சு என்ற யூடியூபில் உத்தமவில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் லிங்குசாமி கூறியது தவறான தகவல் ஆகும். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இது போன்ற பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்" என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.