ஏப்ரல் 18, இந்தூர் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர், ரங்வாசா கிராமத்தை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் (Minor Girl Died Eating Rat Poion Jaggery) ரத்தோர். இவரின் மகள் அஞ்சலி (வயது 16). சிறுமி அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமியின் குடும்பம் விவசாயம் சார்ந்த பின்னணி கொண்டது என்பதால், வீட்டில் வைக்கப்பட்டுள்ள விளைபொருட்களை சாப்பிட எலிகள் வரும். HC on Suicide Due to Love Failure: "காதல் தோல்வியால் ஆண் தற்கொலை செய்துகொண்டால், பெண்ணை கைது செய்ய முடியாது" - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.! 

எலி விஷம் தடைபட்ட வெல்லம்: இதனால் எலித்தொல்லையை கட்டுப்படுத்த அவ்வப்போது குடும்பத்தினர் உணவுப்பொருட்களில் எலி விஷம் சேர்த்து வைப்பது உண்டு. அந்த வகையில், சம்பத்வதன்று வெல்லத்தில் எலி மருந்து தடவி மறைவாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை தூக்கி சுவைத்து பார்த்த எலி, வெல்லத்தை வேறு இடத்தில் வைத்துவிட்டு சென்றதாக தெரியவருகிறது. JK Terror Attack: ஜம்மு காஷ்மீரில் சோகம்; பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி பயங்கரவாதியால் சுட்டுக்கொலை.! 

அதிகாரிகள் விசாரணை: அது தெரியாமல் சிறுமி வெல்லத்தை எடுத்து சாப்பிட்டு இருக்கிறார். இதனால் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக சிறுமியை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழிப்புணர்வு தேவை: குழந்தைகள் இருக்கும் வீட்டில் உணவுப்பொருட்கள் மாற்றம் திண்பொண்டங்களை பெற்றோர் தங்களின் கைகளில் எடுத்து விநியோகம் செய்வது நல்லது. குழந்தைகளுக்கும் தனது கையால் தான் தின்பண்டங்களை பெற்று சாப்பிட வேண்டும் என்ற அறிவுறுத்துவது நல்லது. மேற்கூறிய சம்பவத்தில் எலி தூக்கிச்சென்று வீட்டில் வேறெங்கோ விடப்பட்ட வெல்லம் சிறுமியின் உயிரை பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.