Delhi Metro Yellow Line Accident (Photo Credit: @priyarajputlive X)

நவம்பர் 29, டெல்லி (New Delhi): இரயில் பயணத்தின்போது (Train Travel Safety Measures) பாதுகாப்பு தேவை, இரயில் பயணிகள் தண்டவாளங்களை (Cross Tracks Using Subways or Platform Connecting Stairs) கடக்க சுரங்கப்பாதை அல்லது நடைமேம்பாலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது பலமுறை அறிவுறுத்தப்படும் ஒன்றாக இருக்கிறது. ஆனால், அதனை செய்ய மறுக்கும் நபர்களின் உயிர், சில நேரம் நொடியில் மரணத்தை தழுவுகிறது.

இந்நிலையில், டெல்லி மெட்ரோவின் (Delhi Metro Yellow Line) மஞ்சள் வழித்தட பிரிவில் அமைந்துள்ள சத்ராபூர் (Chhatarpur Metro Station) இரயில் நிலையத்தில், நடுத்தர வயதுடையவர் இரயில் தண்டவாளத்தை நடைமேம்பாலத்தை பயன்படுத்தாமல், தண்டவாளத்தின் குறுக்கே புகுந்து கடக்க முயற்சித்துள்ளார். அச்சமயம் இரயில் வந்துவிடவே, இதனைக்கண்டு பதறிப்போன ஒரு பெண்மணி அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார். Amit Shah On CAA: "குடியுரிமை திருத்த மசோதா அமல்படுத்தப்படும்., தடுக்க முடியாது" - மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி அறிவிப்பு.! 

ஆனால், அவரின் மீது இரயில் பாய்ந்து, இரயிலுக்கும் - தண்டவாளத்திற்கும் இடையே உடல் சிக்கியவாறு உயிர் பறிபோனபின்தான் இரயில் நின்றது. இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரை (Kanpur, UttarPradesh) சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு பயணத்தின்போதும் (Travel Safety Measures) நமக்கு எதிர்பார்த்த திருப்பங்கள் நிகழலாம். ஆகையால் பாதுகாப்பான பயணத்தை முடிந்தளவு மேற்கொள்வது, நமது சுய பாதுகாப்பை உறுதி செய்யும்.