Actor Surya (Photo Credit: Instagram Suriya Sivakumar)

ஜனவரி 16: இந்திய மனித அடையாள நிறுவனம் (Indian Institute of Human Brands - IIHB) அமைப்பால் தென்னிந்தியாவில் உள்ள 4 திரையுலகில் தலைசிறந்தவர்கள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது TIARA என்ற முறையில் 5,246 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, TIARA என்பது நம்பிக்கை, அடையாளம், கவர்ச்சி, மரியாதை, முறையீடு (Trust, Identify, Attractive, Respect, Appeal) ஆகியவற்றின் பேரில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய திரையுலகில் மொத்தமாக 18 நடிகர்கள் என தெலுங்கில் இருந்து 6 நடிகர்களும், தமிழில் இருந்து 6 நடிகர்களும், மலையாளத்தில் இருந்து 4 நடிகர்களும், கன்னடத்தில் இருந்து 2 நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Swiggy Delivery Boy Died: டெலிவரி செய்யச்சென்ற இடத்தில கால்களை கவ்விய நாய்.. பதற்றத்தில் 3வது மாடியில் இருந்து குதித்தவர் பரிதாப பலி.!

Suriya Jyothika (Photo Credit: Twitter @Suriya_offl)

இவர்கள் குறித்து கடந்த நவம்பர் - டிசம்பர் மாதத்தின் இடைப்பட்ட காலங்களில் 5,246 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அனைத்து ரீதியிலும் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி மக்களிடம் நம்பிக்கை, நன்மதிப்பு, செல்வாக்கு, மக்களுக்காக குரல் கொடுப்பது போன்ற பல விஷயங்களில் தலைசிறந்து விளங்கிய சூர்யா (Actor Surya No1) இப்பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜுன் (Allu Arjun), விஜய் தேவரகொண்டா, தமிழ் சினிமாவில் விஜய் (Actor Vijay), சிவகார்த்திகேயன், மலையாளத்தில் பகத் பாசில் (Fahadh Faasil), கன்னடாவில் கிச்சா சுதீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Actor Suriya Sivakumar - Fahadh Faasil (Photo Credit: Wikipedia)

நடிகர் சூர்யா (Actor Surya): தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் சூர்யா, தற்போது வரை 48 படங்களில் நடித்திருக்கிறார். விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். Ajith Kumar Wax Statue: அஜித்துக்கு மெழுகு சிலை வைத்த ரசிகர்கள்.. தமிழகம் முழுவதும் கொண்டுசெல்ல தடபுடல் ஏற்பாடு.! 

மக்கள் நலன் சார்ந்த விஷயங்கள் மற்றும் அரசியல் ரீதியாக குரல் கொடுப்பது என சமூக பணிகளையும் கவனித்து வருகிறார். திரைப்பட நடிகராகவும், தயாரிப்பாளராகும் இருக்கும் சூர்யா, ஏழை-எளிய மக்களுக்கு கல்வி சென்றுசென்ற அறக்கட்டளையை தொடங்கி பல குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பித்து வருகிறார். அவருக்கு IIHB களஆய்வில் முதல் இடம் கிடைத்துள்ளது அவரின் மீதான நன்மதிப்பை அதிகரித்துள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 16, 2023 12:58 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).