டிசம்பர், 7: இந்தியாவில் தன்னை அசைக்க முடியாத அளவுக்கு ஆலமரத்தை போல வேரூன்றி விழுதுகள் விட்டு வளர்ந்த இயக்கம் காங்கிரஸ் கட்சி (Indian National Congress INC). சுதந்திரத்தை நோக்கி ஒவ்வொருவருக்கும் இருந்த தாகம் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் போன்ற இயக்கங்களை அன்றைய காலத்தில் வளர்த்தது. பின்னாட்களில் அவர்களின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு விரக்தி ஏற்பட்டதால் இன்றைய நிலை அக்கட்சியின் ஆலமர பலத்தை அடிவேரில் இருந்து அகற்றி வருகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
2024 தேர்தலும், காங்கிரசும்: 2024 பாராளுமன்ற தேர்தலுக்காக மக்கள் ஒருபுறம் தயாராகிவரும் நிலையில், இழந்த ஆட்சியை மீண்டுமாவது தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் உட்பட பிற எதிர்க்கட்சிகள் கூட்டணி வியூகம் வகுத்து வருகிறது. மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சி தனது ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறது. கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சியின் பலம் என்பது பிரம்மாண்டமாக இருந்து வந்தது.
காங்கிரசின் சரிவு: ஆனால், 2014ல் ஏற்பட்ட 2ஜி ஊழல் விவகாரம், ராகுல் காந்தியின்(Rahul Gandhi) திடீர் காங்கிரஸ் தலைவர் முடிவு, பதவி விலகல் என பல்வேறு சர்ச்சைகளுக்குள் சிக்கி அக்கட்சி திணறி வந்தது. முன்னாள் பிரதமர் சோனியா காந்திக்கு பின்னர் இந்தியாவை மிகப்பெரும் வல்லரசாகவும், வளர்ச்சிப்பாதையிலும் பிரதமராக ராகுல்காந்தி கட்டாயம் அழைத்து செல்வார் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் அவரின் செயல்பாடுகள் மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தினை தந்தது.
2G மர்மம்: 2ஜி விவகாரத்தில் உண்மையில் ஊழல் நடந்ததா? என்பது இன்றுவரை விசாரணை கிடப்பிலேயே இருக்கும் நிலையில், விபரம் தெரிந்தவர்கள் அது ஒரு புகார் மட்டுமே. அதில் ஊழல் நடந்ததா? என்பது இன்று வரை தெரியவில்லை. வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றம் இழைத்திருந்தால் விசாரணையில் தெரிந்திருக்கும். ஆனால், இங்கு அனைத்திலும் மர்மம் என்று கேள்விக்குறியை விடையாக தருகின்றனர்.
பாஜகவின் வளர்ச்சி: இதில், 2ஜி விவகாரம் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியை எதிர்க்கும் எதிர்கட்சிக்கு பெரும் துருப்பு சீட்டாக அமைந்ததால் பல மாற்றங்கள் நடந்துவிட்டன. 2014 தேர்தலுக்கு பின்னர் தன்னை அசுரத்தனமாக பலப்படுத்தி வரும் பாஜக (BJP Victory), தன்னால் நுழையவே இயலாது என்று கருதப்பட்ட பல மாநிலத்திலும் தனது செல்வாக்கினை காண்பித்து வருகிறது. 2 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பாஜகவை முழுவீச்சில் காங்கிரஸ் எதிர்ப்பதாக தற்போது பல வியூகம் வைத்துள்ளது. Health Tips: முழு சைவ பிரியரா நீங்கள்?.. கட்டாயம் இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க..!
ஆணைக்கும் அடி சறுக்கலாம்: அந்த வியூகத்தில் ஒன்றாக, ராகுல் காந்தி குமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் செல்கிறார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திற்கு அவர் சென்றாலும் அரசியல் தெளிவுபடுத்தும் வெளிச்சம் இல்லை என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. காங்கிரஸ் உட்கட்டமைப்பு அமைப்பு ரீதியாக வலுப்பெற்று இருந்தாலும், தேர்தலில் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற நிலை வரும்போது மக்கள் ராகுலை விரும்பவில்லை என்றே அவர்களின் செயல்பாடுகள் தெரிவிக்கின்றன.
இந்துத்துவா: பாரதிய ஜனதா கட்சி இந்துத்துவா கொள்கையினை வைத்து வடமாநிலத்தில் இருந்து தென்மாநிலங்கள் வரை பரவி வலுவான கட்டமைப்பினை ஏற்படுத்திவிட்டது. இந்த கட்டமைப்பினை உடைக்கும் அளவு ராகுல் காந்தி எந்த விதமான அரசியல் செயல்பாட்டிலும் இறங்கவில்லை. ஒரு கட்சிக்கு தலைவர் தேர்வு செய்யப்பட்டால், அவரை வைத்து மாநிலங்கள் தழுவிய பொதுக்கூட்டம் என்பது முந்தைய காலங்களில் நடைபெறும்.
கேள்விக்குறி: ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டாலும், அவர் இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கும் வகையிலான பொதுக்கூட்டம் ஏதும் தற்போது வரை நடத்தவில்லை. அவரது செயல்பாடுகளும் காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்லது சாமானிய மக்களிடையே சந்தேகத்திற்கான கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை பொறுத்த வரையில் வெற்றி என்பது பணத்தினாலும் சத்தியம் இல்லை என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் நடந்துள்ளன. சில இடங்களில் பணம் ஜெயிக்கலாம்.
மக்களின் மனநிலை: தேர்தலின் முந்தைய இரவில் நடக்கும் நிகழ்வு கூட மக்களின் மனநிலையை மாற்றும். கூட்டணி, அன்றைய நிகழ்வு என அனைத்தையும் பொறுத்து தேர்தல் முடிவுகள் நொடிப்பொழுதில் மாறுபடும். மக்கள் இன்றளவில் அரசியல் விவகாரத்தில் பணம் வாங்கினாலும், அவர்களுக்கு எத்தனை வாக்குறுதிகள் அளித்தாலும், அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் தலைவருக்கே வாக்களிக்க விரும்புகின்றனர். அந்த செல்வாக்கு 2014 க்கு முன்னர் ராகுல் காந்திக்கு அமோகமாகவே இருந்தது. ஆனால், அடுத்தடுத்த செயல்பாடுகளில் ஏற்பட்ட விரக்தி ராகுலை அவ்விடத்தில் இருந்து தள்ளி நிறுத்தியது.
மக்கள் பலமும், மகேசன் (ஊடகம்) பலமும்: அதனைப்போல, ராகுல் காந்திக்கு என ஊடக ரீதியாகவும், சமூக வலைதள ரீதியாகவும் பலம் இல்லை. நிலைமை இப்படியிருந்தால் அவர் எப்படி மக்களிடம் ஒவ்வொரு விஷயத்தையும் கொண்டு சேர்க்க இயலும்?. அவர்கள் இன்னும் அதற்கான கட்டமைப்பை கட்டாயம் வலுப்படுத்தவேண்டிய நிலை என்பது உள்ளது. நரேந்திர மோடிக்கு ஆதரவோ, எதிர்ப்போ ஊடகபலமும், சமூக வலைதளபலம் என்பது அசரவைக்கும் நிலையில் உள்ளது என்பது மறுக்க இயலாதது. இந்த அரசியல் களத்தில் இறுதிமுடிவு என்பது மக்கள் கையில் தான் உள்ளது. ஏனெனில் அவர்களே இறுதி தீர்ப்பை அளிப்பவர்கள்.