ஜனவரி 25, புதுடெல்லி (New Delhi): பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) இந்தியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனால் பிரான்ஸ் அதிபரும் - இந்திய பிரதமரும் சிலமணிநேரங்களில் நேரில் சந்தித்து இருநாட்டு நட்பு உரைவையும் மேலும் வலுப்படுத்தும் பொருட்டு ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். 2024 மே மாதம் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தற்போது தயாராக தொடங்கியுள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜக மீண்டும் தன்னை ஆளுங்கட்சியாக நிலை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பிரான்ஸ் அதிபர் - இந்திய பிரதமர் சந்திப்பு: இதற்காக தங்களது கட்சி பிரதிநிதிகள் மற்றும் முக்கிய அமைச்சர்களை மாநில வாரியாக பிரித்து அனுப்பி பல்வேறு சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் (Narendra Modi) இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ராஜஸ்தானில் (PM Modi Jaipur Visit) அவர் தற்போது பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றி வருகிறார். Palani Thaipoosam: பழனியில் தைப்பூச நிகழ்வுகள் கோலாகலம்; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்.!
பாஜக தேர்தல் பிரச்சார பாடல்: இன்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு வரும் இமானுவேல் மேக்ரான், மதியம் 02:30 மணியளவில் இந்திய மண்ணில் அடியெடுத்து வருகிறார். அவர் பிறந்தார் மோடியுடன் நேரில் சந்திக்கவும் இருக்கிறார். இன்னும் 3 மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில், பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார (BJP Parliament Election Song) பாடலும் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்தி மொழியில் வெளியிடப்பட்டுள்ள இந்த பாடல், விரைவில் அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பாடல் பாஜக தொண்டர்களுடைய வரவேற்பு பெற்று வருகிறது.
முடிவு மக்கள் கையில்: கடந்த 2014, 2019 பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைந்துள்ள பாஜக தற்போது மீண்டும் 2024ல் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பிலும் பல்வேறு வியூகங்கள் அமைந்து INDIA என்ற பெயரில் கூட்டணி அமைக்கப்பட்டு ஆட்சியை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முடிவு மக்கள் கைகளில் இருக்கின்றன.
सपने नहीं हकीकत बुनते हैं,
तभी तो सब मोदी को चुनते हैं...
Today, BJP National President Shri @JPNadda launched BJP's official campaign for the 2024 general elections in the virtual presence of Honourable Prime Minister @narendramodi. pic.twitter.com/cqpcekKWEV
— BJP (@BJP4India) January 25, 2024