Budget Session 2023-24 Tamil: மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்னென்ன?.. முழு விபரம் உள்ளே..!
Nirmala Sitharaman on Budget Session 2023-24 (Photo Credit: ANI)

பிப்ரவரி 01, பாராளுமன்றம்: பிரதமர் நரேந்திர மோடியின்  (Narendra Modi) தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட் 2023 - 24 மத்திய அமைச்சரவை (Central Cabinet) ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து, இன்று காலை 11 மணியளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Finance Minister Nirmala Sitharaman) நாடாளுமன்றத்தில் 2023 - 2024ம் (Budget Session 2023-24) ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் சீதாராமன் பேசிய உரைகள் மற்றும் அறிவிப்புகள் பின்வருமாறு.,

 • இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக 2023-24 பட்ஜெட் (Union Budget Session 2023-24) இருக்கும். கொரோனாவால் தொய்வடைந்த இந்திய பொருளாதார மீண்டு சரியான பாதையில் செல்கிறது. உலகளவில் வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதாரத்தை முக்கியமாக கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. உலக நாடுகளில் இந்திய பொருளாதாரம் நட்சத்திரம் போல ஒளிந்து வருகிறது. இந்தியாவில் அதிக பொருளாதார வளர்ச்சி இருக்கும் என வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7% இருக்கும். Khushbu Sundar Sad: 30 நிமிடம் கால்கடுக்க காத்திருந்த குஷ்பூ.. முட்டியில் காயத்துடன் விமான நிலையத்தில் நடந்த சோகம்.! 
 • ஜி20 நாடுகளின் (G 20 Countries) அமைப்பில் தலைமை பொருளை இந்தியா ஏற்றுள்ளது. இதனால் உலகளாவிய பொருளாதாரம் என்பது வலுவாகும். கொரோனா (Corona Virus Lockdown) பரவலின்போது 80 கோடி மக்களுக்கு 28 மாதங்கள் உணவு தனியங்களில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. கொரோனாவின் (Covid19 Outbreak) போது மக்கள் பட்டியினில் வாடாமல் அரசு பார்த்துக்கொண்டது. கடந்த 9 ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரம் 10வது இடத்தில இருந்து 5-ற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. இலவச கழிவறைகள் திட்டம், சமையல் எரிவாயு திட்டம் உட்பட பல மத்திய அரசு திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது.

List of G20 Countries on Map View (Photo Credit: Wikipedia)

 • இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி (India's Economy Growth) என்பது சரியான திசையை நோக்கி பயணிகரித்து. நமது நல்ல எதிர்காலம் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு உள்ளது. உணவு தானியங்கள் வழங்கல் திட்டத்திற்காக ரூ.2 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் 100 ஆண்டுகால புளூ பிரிண்ட்டாக 2023-24 பட்ஜெட் இருக்கும். தனிநபர் வருமானம் என்பது 2 மடங்கு அதிகரித்து ரூ.1.97 இலட்சமாக இருக்கிறியாது. உழவர் நல நிதிஉதவி திட்டத்தின் கீழ் 11.40 கோடி விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. உஜ்வானா திட்டத்தில் 9 கோடி ஏழை மக்கள் எரிவாயு இணைப்புகளை இலவசமாக பெற்றுள்ளார்கள்.
 • 75ம் சுதந்திர தினத்தை (Independance Day) நாம் கொண்டாடும் வேளையில், இந்திய நாட்டை (India) உலக நாடுகள் ஒளிரும் நட்சத்திரம் (Bright Star) என அங்கீகரித்து இருக்கிறது. இந்திய சுற்றுலாத்துறையை மேம்படுத்த மாநில அரசோடு இணைத்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைவர்க்கும் வளர்ச்சி என்ற இலக்குடன் உட்கட்டமைப்பு உட்பட 7 திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. உணவு தானிய விநியோகத்திற்காக ரூ.2 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 44.80 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளது. Palghar Car Bus Accident: தறிகெட்ட கார் – சொகுசு பேருந்து மோதி பயங்கர விபத்து.. 4 பேர் உடல் நசுங்கி பலி.! 
 • உணவு உற்பத்தியில் இந்தியா உலகளவில் முன்னேறி முன்னணி வகிக்கிறது. பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல், புதிய வேலை வாய்ப்புகள் கொண்ட அம்சங்களை பட்ஜெட் அடிப்படையாக கொண்டுள்ளது. பசுமை எரிசக்தி, விவசாயம் போன்றவற்றுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் வழங்குகிறது.விவசாய துறைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்க நிதி தொகுப்பு உருவாக்கப்படும். சிறுதானிய உற்பத்தியில் இந்திய நாட்டினை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் (Fisherman Welfare Schemes) நலத் திட்டத்திற்காக ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும்.

Farmer on Agriculture Field (Photo Credit: Wikipedia)

 • இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை (Agriculture) தொடர்ந்து ஊக்குவிக்க வேளாண்துறை உதவியுடன் ரூ.20 இலட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தைகள், இளையோர் பயன்பெறும் வகையில் டிஜிட்டல் நூலகம் ஏற்படுத்தப்படும். டிஜிட்டல் நூலங்கள் (Digital Library) ஆங்கிலம், மாநில மொழிகளில் அமைக்கப்படும். கால்நடைகள் நலன், மீன்வளத்துறைக்கு முக்கியத்துவம் வழங்க கடன் வழங்கப்படும். கிராமப்புறத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க அரசு உறுதுணையுடன் இருக்கும். ICMR நிறுவனத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
 • பழங்குடியினர் மேம்பாட்டிற்கு பல திட்டங்கள் வகுக்கப்பட்டு, அதனை செயல்படுத்தி அவர்களின் வாழ்வை முன்னேற்றமடைய வைக்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அனைவர்க்கும் வீடு திட்டத்தில் இலக்கை அடைய பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.76,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தியாவின் பல துறைகளில் மூலதன முதலீட்டிற்கு ரூ.10 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாநிலத்திற்கு வட்டியில்லா கடனுக்கு ரூ.1.30 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இரயில்வே துறையில் புதிய பாதை அமைக்க ரூ.2.40 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. Humpback Whale Died: கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய 35 அடி நீளமுள்ள ஆண் திமிங்கலம்.. காரணம் குறித்து ஆய்வாளர்கள் விசாரணை.! 
 • வரும் 3 ஆண்டுகளில் ஏகலைவா மாதிரி பள்ளியில் 38,800 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஏகலைவா பள்ளியில் 3.5 இலட்சம் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கப்படும். இந்தியாவின் அனைத்து பகுதியிலும் விமான வசதியை ஏற்படுத்த புதியதாக 50 விமான நிலையங்கள் (Airports India) அமைக்கப்படும். முக்கிய நகரத்தில் உட்கட்டமைப்பை ஏற்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 1 இலட்சம் மகளிர் சுயஉதவி குழுக்களை புதிதாக ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்திற்கு முற்றுப்புள்ளியை வைக்க, அப்பணிகளில் 100 % இயந்திரங்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

Working Sever Line by Sanitary Worker | File Picture (Photo Credit: Wikipedia)

 • இந்தியாவில் 3 உயர்கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து செயற்கை நுண்ணறிவு நுட்பம் (AI)கொண்ட சிறப்பு மையமாக அவை மாற்றப்படும். டிஜிட்டல் இந்தியா KYC நடைமுறைகள் மேலும் எளிமையாக்கப்படும். மத்திய - மாநில அரசின் திட்டங்கள், சேவையை பெற பேன் மற்றும் ஆதார் போன்றவை அடையாள ஆவணமாக இருக்கிறது. இந்திய சாலை உட்பட போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்ற ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்திய நீதித்துறையை (Digitalized Indian Courts) டிஜிட்டல் மயமாக்க ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் உட்பட படிம எரிபொருளுக்கு மாற்று எரிபொருள் திட்டத்திற்கு ரூ.19,700 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
 • CNG & பசுமை எரிசக்தி (Green Energy Resources) மேம்பாடு திட்டத்திற்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு, 1 கோடி விவசாயிகள் இயற்கை உரத்தை பயன்படுத்திட ஊக்குவிக்கப்படும். சூரிய ஒளியாற்றல் உட்பட பசுமை எரிசக்தி ஆலைகள் ரூ.27,500 கோடி மதிப்பீடுகளில் ஏற்படுத்தப்படும். மாசுகளை அதிகரிக்கும் மத்திய-மாநில அரசு வாகனங்கள் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்து, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இளையோர் மேம்பாடு திறன் திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன்மூலமாக 47 இலட்சம் இளையோர் மேம்பாடு பெரும் வகையில் பயிற்சி வழங்கப்படும். வரும் 3 ஆண்டுகளில் 10 ஆயிரம் உயிரி உள்ளீடு ஆதாரங்களுக்காக மையங்கள் அமைக்கப்படும். President Speech On Parliament: பாராளுமன்றத்தில் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்த குடியரசுத்தலைவர்.. முழு விபரம் உள்ளே.! 
 • இந்திய சுற்றுலாவை (India Tourism) மேம்படுத்துவதற்கு 50 புதிய நகரங்களானது அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. எல்லைகளில் இருக்கும் கிராமங்களில் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும். சிறு,குறு நிறுவனத்தின் மேம்பாடு கடன் உத்திரவாத திட்டத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தேசிய ஹைட்ரஜன் மிஷன் (National Hydrogen Mission Scheme) திட்டத்திற்கு ரூ.19700 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2030க்குள் ஹைட்ரஜன் உற்பத்தியை 50 இலட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் வரம்பு ரூ.15 இலட்சத்தில் இருந்து ரூ.30 இலட்சமாக உயர்த்தப்படுகிறது.

Mahabalipuram Temple (Photo Credit: Wikipedia)

 • 7.5% வட்டியில் மகளிருக்கு சிறுசேமிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. பெண்களின் பெயரில் 2 ஆண்டில் ரூ.2 இலட்சம் முதலீடு செய்யும் வகையில் 7.5% வட்டியில் சிறுசேமிப்பு திட்டம் தொடங்கப்படும். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி GDP நிதி பற்றாக்குறை 5.9% ஆக உள்ளது. எதிர்காலத்தில் GDP நிதி பற்றாக்குறை 4%க்கு கீழ் குறைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களின் (E-Vehicles Tax) பயன்பாடுகளை ஊக்குவிக்க, லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்க அடிப்படை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் எலக்ட்ரிக்கல் வாகனங்களின் விலை குறையும். தொலைக்காட்சி பேனல்களுக்கு அடிப்படை சுங்க வரி 2.5% குறைக்கப்படுகிறது. செல்போன் உதிரி பாகத்திற்கான சுங்க வரி 21% ல் இருந்து 13% ஆக குறைக்கப்படுகிறது.
 • கிட்சன் சிம்னி (Kitchen Chimney Tax) இறக்குமதி வரி 7.5%-ல் இருந்து 15% ஆக உயர்த்தப்படுகிறது. இறக்குமதியாகும் சைக்கிள், பொம்மைகளுக்கு வரி குறைக்கப்படுகிறது. தங்கம், வெள்ளி (Gold & Silver Tax) மீதான சுங்க வரி உயர்த்தப்படுகிறது. நடப்பு ஆண்டில் 6.50 கோடி பேர் வருமானவரியை தாக்கல் செய்துள்ளார்கள். வருமானவரியை தாக்கல் செய்யும் நடைமுறை மேலும் எளிமைப்படுத்தப்படும். பசு சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்த கோவர்தன் திட்டத்தின் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, அதற்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கரும்பு (Sugarcane) விவசாயிகளின் நிலுவை தொகை பெற, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வரிச்சலுகை வழங்கப்படுகிறது.

Smoking Kills You & Your Loves one Indirectly (Photo Credit: Wikipedia)

 • புகையிலை (Cigarette Tax) பொருட்கள் மீதான வரி 16% உயர்த்தப்படுகிறது. தனிநபருக்கான வருமான வரி (Income Tax) உச்ச வரம்பு ரூ.7 இலட்சமாக உயர்த்தப்படுகிறது. புதிய வரிவிதிப்பு திட்டத்தின் கீழ், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு என்பது ரூ.5 இலட்சத்தில் இருந்து ரூ.7 இலட்சமாக உயர்த்தப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு ரூ.9 இலட்சம் வரியில் வருமானம் பெரும் நபர்கள், ரூ.45 ஆயிரம் வரி செலுத்தினால் போதுமானது. தனிநபர் அடிப்படை வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.5 இலட்சத்தில் இருந்து ரூ.3 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இராணுவத்தை மேம்படுத்திடவும், அதனை கூடுதல் நவீனமயமாக்கிடவும் ரூ.5.32 இலட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 01, 2023 11:40 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).