Template: Dec Month Birthday Politicians

டிசம்பர், 8: இந்தியத் திருநாட்டில் சாதனையாளர்களுக்கு பஞ்சம் இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத்தின் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் அரசியல் கட்சி (Political Party & Leader) தலைவர்களில் இருந்து, அவர்களின் வழிநடக்கும் தொண்டர்கள் வரை பலரும் அவர்களின் சாதனைகளால் நீங்காத இடத்தை பெற்றிருப்பார்கள்.

ஆங்கில மாத நாட்காட்டியின் இறுதி மாதமாக இருப்பது டிசம்பர் மாதம் (December Month). இம்மாதத்தில் பிறந்து இந்திய அளவில் புகழ்பெற்று கோலோச்சி இருந்த அரசியல் தலைவர்களின் விபரங்கள் குறித்து இன்று காணலாம்.

அடல்ப் பிஹாரி வாஜ்பாய் (Atal Bihari Vajpayee): கடந்த டிசம்பர் 25, 1924ல் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் நகரில் பிறந்தவர் அடல்ப் பிஹாரி வாஜ்பாய். 1939ல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட வாஜ்பாய் தனது திறமை மற்றும் கடும் உழைப்பால் 3 முறை இந்தியாவின் பிரதமராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இவரின் ஆட்சிக்காலத்தில் தகவல் தொழில்நுட்பம், சாலை போக்குவரத்துத்துறை போன்றவை மேம்படுத்தப்பட்டன. இவர் உலகில் மறைந்தாலும், அவரின் சாதனைகளால் பாரதமே வியக்கும் அளவு குஜராத் மாநிலத்தில் அவரின் திருவுருவ சிலை பிரம்மாண்டமான வகையில் நிறுவப்பட்டுள்ளது. Cure Mud Sores: தொடங்கியது மழைக்காலம்… சேற்றுபுண்களில் இருந்து தப்பிப்பது எப்படி?.. இயற்கை வைத்தியங்கள் என்னென்ன?.! 

ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி (YS Jagan Mohan Reddy): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கடப்பா, புலிவந்தலா பகுதியில் டிசம்பர் 21, 1972ம் ஆண்டு பிறந்தவர் எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி @ ஜெகன் மோகன் ரெட்டி. இவர்  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கி, 2014ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கி 2019ல் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் ஆட்சியை பிடித்தவர் ஆவார்.

YS Jagan Mohan Reddy, Chief Minister of Andra Pradesh.

சோனியா காந்தி (Sonia Gandhi): இத்தாலி வம்சாவளியை சேர்ந்த இந்திய அரசியல்வாதி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டிசம்பர் 9, 1946ல் பிறந்தார். தனது இளம்வயதில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் இங்கிலாந்தில் படித்து வாழ்க்கையை தொடங்கிய சோனியா காந்தி, ராஜீவ் காந்தியை திருமணம் செய்து நேரு-காந்தியின் குடும்பத்தில் இடம்பெற்றார்.

அருண் ஜெட்லீ (Arun Jaitley): பஞ்சாப் மாநிலத்தில் 28 டிசம்பர் 1952-ல் பிறந்தவர் அருண் ஜெட்லீ. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர், மத்திய அமைச்சர் என பல பொறுப்புகளில் தவிர்க்க இயலாத இடத்தில் இருந்த அருண் ஜெட்லீ, சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 2019ல் உயிரிழந்தார்.

சரத் பவார் (Sarat Pawar): மகாராஷ்டிரா மாநில அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக இருப்பவர் சரத் பவார். காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சரத் பவார், பின்னாளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கி தன்னை தனிப்பெரும் ஆளுமையாக இன்றுவரை வைத்துள்ளார். இவர் 4 முறை மராட்டிய முதல்வராகவும், பல முறை மத்திய அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார்.

Sharad Pawar MP, Nationalist Congress Party, Maharastra State.

பிரதீபா பாட்டில் (Pratibha Patil): 1934 டிசம்பர் 19ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில் பிறந்தவர் பிரதிபா தேவிசிங் பாட்டில். மராட்டிய மாநிலங்களவை, பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினராக பணியாற்றிய பிரதீபா பாட்டில், இராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் கடந்த 2007ல் நடந்த குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்து குடியரசு தலைவராக உயர்ந்தவர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 8, 2022 03:12 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).