நவம்பர் 05, புதுடெல்லி (New Delhi): டெல்லியில் காற்று (Delhi Air Pollution) மாசுபாட்டின் தரம் வெகுவாக அதிகரித்து, மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்து அம்மாநில சுற்றுச்சூழல் துறை (Delhi Environment Minister Gopal Rai) அமைச்சர் கோபால் ராய் பேசுகையில், "டெல்லி நகருக்குள் நடைபெறும் கட்டுமான பணிகள், வாகனங்கள் வருகை, பிஎஸ்3 பெட்ரோல், பிஎஸ்4 டீசல் வாகனத்திற்கு தடை விதிப்பது உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சரிடம் மனு வழங்கியுள்ளோம். உத்திரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இதனால் மத்திய அரசுடன் இணைந்து, டெல்லி-என்சிஆர்-நொய்டா பகுதியில் மேற்கூறிய பரிசீலனை நிறைவேறும் பட்சத்தில், அந்த விதிகளை அமல்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம். மத்திய அரசும் இதில் கவனம் செலுத்தும் என நம்புகிறேன்" என்று கூறினார். Thengai Sadam: சுவையான, கமகமக்கும் தேங்காய் சாதத்தை இப்படி செய்து பாருங்கள்; அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)