Thengai Sadam (Photo Credit: YouTube)

நவம்பர் 05, சென்னை (Cooking Tips): தென்னிந்திய உணவுகளில் விதவிதமான சாதங்களுக்கு பஞ்சமே கிடையாது. தங்களுக்கு சீசன் நேரங்களில் எளிதாக கிடைக்கும் பொருட்களை வைத்து பல விதமான உணவுகள் நம்மிடையே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இன்று தேங்காய் சாதம் (Thengai Sadam) செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம். வழக்கமான வழிகளில் இல்லாமல், இவ்வாறான சுவையான தேங்காய் சாதம் (Coconut Rice) செய்து கொடுத்தால், உங்களின் குழந்தைகளும் விரும்புவார்கள். Dog Waiting 4 Months For Died Owner: உயிரிழந்த உரிமையாளருக்காக 4 மாதங்கள் பிணவறை முன் காத்திருக்கும் நாய்; கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்.! 

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 1,

கடுகு-உளுந்து - தாளிக்க தேவையான அளவு,

சீரகம் - 2 சிறிய கரண்டி,

எள்ளு - 2 சிறிய கரண்டி,

கடலை பருப்பு - 3 கரண்டி,

மிளகாய் வத்தல் (காய்ந்த மிளகாய்) - 4 (உங்களின் காரத்திற்கேற்ப),

இஞ்சி - சிறிதளவு,

கறிவேப்பில்லை, கொத்தமல்லி தழை - சிறிதளவு,

முந்திரி பருப்பு - 10,

உப்பு - தேவையான அளவு,

பெருங்காயப்பொடி - சிறிதளவு,

வடித்து உலரவைத்த அல்லது சூடான சாதம் - 300 கிராம்.

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட தேங்காயை, துருவிய வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் வானெலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் முந்திரியை பொன்னிறமாக சேர்த்து வதக்க வேண்டும். Madurai Lightning: மழைக்காக மரத்தடியில் ஒதுங்கியதால் சோகம்; மின்னல் தாக்கியதில் 2 பேர் பலி., 18 பேர் படுகாயம்.! 

பகுதியளவு பொன்னிறம் வந்ததும், கடலைப்பருப்பு, கடுகு-உளுந்து, இஞ்சி, சீரகம், எள்ளு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை, பெருங்காயப்பொடி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.

கடுகு வெடித்ததும் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து மிதமான தீயில் 2 முதல் 5 நிமிடம் வரை கிளறவேண்டும்.

நாம் சேர்ந்த தேங்காய் லேசான பொன்னிறத்தை அடைந்ததும், அதனுடன் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறி, கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் சுவையான தேங்காய் சாதம் தயார்.

தேங்காய் சேர்ப்பதற்கு முன் உங்களுக்கு தேவையான அளவில் முக்கால்பங்கு உப்பை சேர்த்து, பின் சாதத்தை கிளறும்போது கால்பங்கு சேர்ந்து தேங்காய் சாதத்தை தயார் செய்ய வேண்டும்.