Rahul Gandhi Eating IceCream (Photo Credit: Curly Tales)

ஜனவரி 23, ராஜஸ்தான்: முன்னாள் காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி (Rahul Gandhi) தான் அறிவித்தபடி இந்தியா முழுவதும் நடைபயணமாக (Bharat Jodo Yatra) சென்று மக்களை சந்தித்து வருகிறார். இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் கன்னியாகுமரியை (Kanyakumari) முதலாவதாக வைத்து தொடங்கிய ராகுலின் நடைபயணம், தற்போது 3400 கி.மீ தொலைவை கடந்து பயணித்து வருகிறது. தென்னிந்திய மாநிலங்களை தொடர்ந்து தற்போது ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) நோக்கி பயணம் நடைபெற்று வருகிறது.

இந்த பயணத்தின் போது அரசியல் ரீதியாக பல இடங்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் (Congress & Alliance Parties) சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார். அவரது பயணத்தின்போது பல யூடியூப் சேனல் (YouTube Channels) நிர்வாகிகளுடன் உரையாற்றி வருகிறார். சமீபத்தில் இராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து செயல்பட்டு வரும் Curly Tales சேனலின் நிர்வாகி காமியா ஜெயினுடன் பேசினார்.

Rahul Gandhi (Photo Credit: Curly Tales)

அப்போது, காமியாவுக்கு அழைப்பு ஒன்று வந்துவிட, அவர் அதனை கவனித்து சென்றுவிட்டார். அமைதியாக ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டு இருந்த ராகுல் காந்தி, 10 நிமிட இடைவெளியில் 4 ஐஸ்கிரீமை சாப்பிட்டு முடித்துள்ளார். இதனை நகைச்சுவை விடியோவாக எடுத்து பதிவிட்டுள்ள காமியா ஜெயின், ராகுல்காந்தி பேசி வைரலாகிய "கதம், டாடா, குட் பாய்" (Rahul's Trending Dialogue Katham, Tata, Good bye) என கூறுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ ஞாயிற்றுக்கிழமையான நேற்று Curly Tales யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Penalty For Instagram Famous Girl: நடுரோட்டில் காரை நிறுத்தி ஸ்டண்ட் வீடியோ எடுத்த இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ.17 ஆயிரம் அபராதம்.. ஆப்படித்த காவல்துறை.!! 

கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைபயணம், ஜனவரி 30ல் ஸ்ரீநகரில் (SriNagar) 3970 கி.மீ பயணத்தை நிறைவு செய்யும். 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேச மக்களை ராகுல் தனது நடைப்பயணத்தில் சந்தித்து இருக்கிறார். அங்குள்ள தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக்கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டிள்ளார்.

ஜனவரி மாதம் 30ம் தேதி காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களின் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றவும் கட்சி தலைமை அறிவுறுத்தி இருக்கிறது. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு (2024 Parliament Election) முன்னோட்டமாக ராகுல் காந்தி தொடங்கியுள்ள பயணம் நிச்சயம் வெற்றியில் முடியும் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Instagram Reel Video  

 
 
 

View this post on Instagram

 
 
 

 

A post shared by Kamiya Jani (@kamiya_jani)

YouTube Video Attached Here

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 23, 2023 01:10 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).