மின்னல் தாக்கி இருவருக்கு நேர்ந்த சோகம்.. திடீரென பெய்த கோடை மழையால் துயரம்.!
கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடுமையாக அவதிப்பட்ட நிலையில், திடீரென பெய்த மழை காரணமாக மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
மே 03, விஜயவாடா (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியில் இன்று கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்த மக்களை குளிர்விக்க திடீர் மழை பெய்தது. அப்போது, கடுமையான மின்னலும் தாக்கியது. இந்நிலையில், பபாடிலா மாவட்டத்தில் 2 பேர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். Kozhikode Hospital Fire: அரசு மருத்துவமனையில் தீ விபத்து.. 4 உயிர்கள் பரிதாப பலி..!
மழையினால் கடும் சேதம்:
கடுமையான காற்றின் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்குள்ள மொகலராஜபுரம், படமடா பகுதியில் மழை நீர் புகுந்தது. இந்திரா கெளத்ரி மலைப்பாதை அதிகாரிகளால் தற்காலிகமாக மூடப்பட்டது. கனமழை மற்றும் காற்று காரணமாக ஒருசில இடங்களில் மரமும் சாலைகளில் விழுந்தது. கிருஷ்ணா மாவட்டத்தில் கடுமையான பயிர் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
(The above story first appeared on LatestLY on May 04, 2025 09:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

