Death Suicide (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 02, இந்தூர் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர், அனுராக் நகரில் வசித்து வருபவர் அக்லாங் ஜெயின் (வயது 13). சிறுவன் அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுவனிடம் ஸ்மார்ட்போன் இருக்கிறது. இதனால் அடிக்கடி அதனை வைத்து விளையாடி வந்துள்ளார். பிரீ பயர் கேமை அதிகம் விளையாடியவர், சம்பவத்தன்று தனது அம்மாவின் டெபிட் கார்டு விபரங்களை பயன்படுத்தி ரூ.2,800 செலவு செய்துள்ளார். Prajwal Revanna: பாலியல் வழக்கு; பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

காவல்துறை விசாரணை:

இந்த பணத்தை இழந்த விசயம் குறித்து ஜெயினின் தாய் மகனிடம் கேட்டுள்ளார். இதனால் சிறுவன் வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவில் வீட்டில் தனது அறையில் உறங்கிக்கொண்டு இருந்த சிறுவன் தற்கொலை செய்துகொண்டார். மறுநாள் காலையில் சிறுவனின் தாத்தா பேரனை எழுப்பச் சென்றபோது விபரம் தெரியவந்தது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது மரணம் உறுதி செய்யப்பட்டது. காவல்துறையினரின் விசாரணையில் சிறுவன் பிரீ பயர் விளையாட்டில் பணத்தை இழந்தது தெரியவந்தது.