Indore Wedding Party Heart Attack Death (Photo Credit: @TeluguScribe X)

பிப்ரவரி 09, விதிஷா (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர், விதிஷா பகுதியில் வசித்து வரும் இளம்பெண் பிரணிதா ஜெயின். சம்பவத்தன்று இவரின் சகோதரிக்கு திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை விறுவிறுப்புடன் கவனித்து இருக்கின்றனர். திருமண கொண்டாட்டங்களில் உறவினர்கள் தீவிரமாக இருந்த நிலையில், அங்குள்ள சம்பர்தாயப்படி சங்கீத நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. அப்போது, மணமகளின் சகோதரி ப்ரணிதா நடனமாடி இருக்கிறார். அவரை உறவினர்களும் உற்சகப்படுத்தி இருக்கின்றனர். Atishi Marlena: டெல்லி மாநில முதல்வர் பொறுப்பை ராஜினமா செய்தார் அதிஷி..! 

உறவினர்கள் கண்முன் பறிபோன உயிர்:

இதனிடையே, அவர் கொண்டாட்ட நிகழ்வின்போதே திடீரென மயங்கி விழுந்து மூர்ச்சையானார். அவரை பதறியபடி மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதி செய்தபோது, அங்கு ப்ரணிதா மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். இந்த விசயம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், ப்ரணிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், நடனமாடியபடி உயிரிழந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

மாரடைப்பால் மரணம் ஏற்பட்ட சோகத்தின் காட்சிகள்: