மே 24, புதுடெல்லி (New Delhi): கடந்த மே 19ம் தேதி ஜப்பான் நாட்டில் நடைபெற்ற ஜி7 நாடுகளின் (Japan G7 Summit 2023) உச்சி மாநாட்டுக்கு, ஜப்பான் நாடு இந்தியாவை சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைப்பு விடுத்தது. இதனையடுத்து, இந்தியா சார்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) ஜப்பான் நாட்டுக்கு சென்று உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்தார். தனது தரப்பு கருத்துக்களை உலக நாட்டின் தலைவர்களிடையே வழங்கினார்.
இந்த பயணத்தை தொடர்ந்து பப்புவா நியூ கினியா (Papua New Guinea) நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள தீவுக்கூட்டத்தின் தலைவர்களிடையே உரையாற்றினார். இருநாட்டு பிரதமர்களும் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். அங்கு டோக் பிசின் மொழியில் திருக்குறள் (Tirukkural Tok Pisin Language) வெளியிடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் பின் தெற்கு நாடுகள் அணிதிரள்வோம் என அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மொரப்பி தெரிவித்தார்.
#WATCH | People click selfies with Prime Minister Narendra Modi and Australian PM Anthony Albanese as the two leaders meet them after the community event at Qudos Bank Arena in Sydney. pic.twitter.com/jiFlcb6Xnz
— ANI (@ANI) May 23, 2023
இறுதியாக ஆஸ்திரேலியா (Australia) நாட்டுக்கு 3 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பான்ஸ் (Antony Alabanse) உற்சாக வரவேற்பு அளித்தார். சிட்னி நகரில் புலம்பெயர் இந்தியர்களிடையே இருநாட்டு தலைவர்களும் உரையாற்றுகையில், இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளின் நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் உரையாற்றினார்.
இறுதியாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி, பிரதமர் மோடியை "Modi The Boss" என குறிப்பிட்டார். ஆஸ்திரேலிய-இந்தியா நல்லுறவு (Australia India Friendship), பாதுகாப்பு விவகாரங்கள் உட்பட பல விஷயங்கள் தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த பயணம் மற்றும் அரசுமுறை சந்திப்புகள் குறித்து இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளின் பிரதமர்கள் தங்களின் ட்விட்களை பதிவு செய்துள்ளனர்.
அந்த ட்விட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், "ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனியுடன் நடந்த ஆக்கப்பூர்வமான பேச்சு வார்த்தை, வணிகத் தலைவர்களைச் சந்தித்தது, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்களை சந்தித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க சமூகத் திட்டத்திற்கு, இது ஒரு முக்கியமான வருகையாகும். இது இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நட்பை அதிகரிக்கும்.
ஆஸ்திரேலிய மக்களுக்கும், ஆஸ்திரேலிய அரசுக்கும், எனது அன்பு நண்பர் ஆண்டனிக்கும், அவர்களின் விருந்தோம்பலுக்கும் மிக்க நன்றி. உலகளாவிய நன்மைக்காகவும் துடிப்பான இந்தியா-ஆஸ்திரேலியா நட்புறவை நோக்கி தொடர்ந்து பணியாற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.
From productive talks with PM @AlboMP to a historic community programme, from meeting business leaders to eminent Australians from different walks of life, it’s been an important visit which will boost the friendship between 🇮🇳 and 🇦🇺. pic.twitter.com/5OdCl7eaPS
— Narendra Modi (@narendramodi) May 24, 2023
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் இதுகுறித்து தெரிவிக்கையில், "சிட்னி நகரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்காக மாற்றப்பட்டது" என தெரிவித்து இருக்கிறார். இந்த பயணத்தின் மூலமாக இந்திய-ஆஸ்திரேலிய உறவுகள் மிகவும் நெருக்கமாகியுள்ளது.
Sydney turning it up for Indian Prime Minister @narendramodi 🇦🇺🇮🇳 pic.twitter.com/iSQYYyMYsb
— Anthony Albanese (@AlboMP) May 24, 2023