Karnataka State Assembly Poll Announcement (Photo Credit: Election Commission India)

மார்ச் 29, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தின் நடப்பு சட்டப்பேரவை அதிகாரத்திற்கான ஆயுட்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் நிறைவுபெறவுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடக்க ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளன. இன்று காலை 11:30 மணியளவில் மாநில தேர்தல் ஆணைய குழு செய்தியாளர்களை சந்தித்தது.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வைத்து மாநில தேர்தல் தொடர்பான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. இந்த தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கர்நாடக மாநில சட்டபேரவைக்கான பொதுத்தேர்தல் ஒரே கட்டமாக மே மாதம் 15ம் தேதி நடைபெறுகிறது. Kerala BJP: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து; கேரளா மாநில பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு.!

தேர்தல் வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி தொடங்கி 15ம் தேதிக்குள் நிறைவு பெற திட்டமிடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் இருக்கின்றன. இதில் பெரும்பான்மைக்கு 113 இடங்களில் ஒரு கட்சி தனியாக அல்லது தனது கூட்டணியோடு சேர்ந்து வெற்றி அடைய வேண்டும். தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் 13ம் தேதி தொடங்கி 20ம் தேதிக்குள் நிறைவு பெறுகிறது.

கர்நாடக மாநிலத்தை பொறுத்தமட்டில் ஆளும் பாஜக, ஆட்சியை பாதியில் இழந்த ஜனதா தளம் (எஸ்), கடந்த தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தனது பிரச்சாரப்பணிகளை மேற்கொள்ளும். இதனால் அங்கு மும்முனை தேர்தல் போட்டிகளும் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.