மே 28, நாடாளுமன்றம் (New Parliament India): ஆங்கிலேயர் ஆட்சியில் அமைக்கப்பட்ட இந்திய பாராளுமன்றத்திற்கு விடுதலை கொடுத்துவிட்டு, 105 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு என புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. இன்று புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தேவார பாடல்களை அங்கு சிவனடியார்கள் மூலமாக ஒலிக்கவிட்டார்.

சோழர்களின் வழிவந்த செங்கோலை தமிழ் ஆதீனங்கள் மூலமாக பெற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அதனை நாடாளுமன்ற சபாநாயகர் இருக்கைக்கு முன்பு, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பார்க்கும் வகையில் நிறுவினார். இந்த நிகழ்வால் தமிழகமே பெருமை கொள்கிறது என நடிகர் ரஜினிகாந்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த விஷயம் குறித்து மதுரை ஆதீனத்தின் 293வது தலைமை அர்ச்சகர் ஸ்ரீ ஹரிஹர தேசிக சுவாமிகள் (Madurai Adheenam Sri Harihara Desika Swamigal) பேசுகையில், "புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்பதை நான் பெருமையாக கருதுகிறேன். பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மக்களுடன் பெருமையுடன் நிற்கிறார். PM Narendra Modi About Sengol: செங்கோலை பெற்று புதிய உத்வேகத்துடன் பேசிய பிரதமர் மோடி; நடுநடுங்கப்போகும் எதிரிகள்..!

தமிழ் ஆதீனங்களை அழைத்து பாராளுமன்றத்தில் தமிழ் கலாச்சாரத்தை பெருமையுடன் ஊக்குவித்த முதல் நபர் பிரதமர் நரேந்திர மோடி தான். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இலங்கையில் தமிழர்களை இந்திய காங்கிரசும், ராஜபக்சே அரசும் கொன்று குவித்தது.

பிரதமர் நரேந்திர மோடி இங்கு பதவியேற்றதும் இலங்கை தமிழர்களுக்காக வீடு கட்டிக்கொடுத்து, அங்கு பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். இன்று வரை இலங்கை தமிழர்களுக்காக பல உதவிகளை செய்து வருகிறார்" என பேசினார்.