Man Killed: உயிரிழந்த மனைவியை உயிருடன் கொண்டு வராத பூசாரி அடித்தே கொலை; பொய்யுரைத்த பூசாரிக்கு பகீர் சம்பவம்.!

ரூ.2 ஆயிரம் பணத்திற்காக உயிரிழந்த பெண்ணை உயிருடன் கொண்டு வருகிறேன் என வாக்குறுதி கொடுத்த பூசாரி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Man Killed: உயிரிழந்த மனைவியை உயிருடன் கொண்டு வராத பூசாரி அடித்தே கொலை; பொய்யுரைத்த பூசாரிக்கு பகீர் சம்பவம்.!
Crime File Picture (Photo Credit: PIxabay)

மே 30, மாண்டவி (Maharashtra News):  கணவரின் சுயரூபம் தெரியாமல் ரூ.2 ஆயிரம் பணத்திற்காக உயிரிழந்த பெண்ணை உயிருடன் கொண்டு வருகிறேன் என வாக்குறுதி கொடுத்த பூசாரி, கொலை வழக்கில் சிறைக்கு சென்ற நபரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மாண்டவி பகுதியில், கடந்த வியாழன் கிழமை அதிகாரில நேரத்தில் வயதானவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில், உயிரிழந்தவர் பிவா வைத்தா என்றும், பூசாரியாக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. இதன்பின் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமிராக்கள் கைப்பற்றப்பட்டன.

அதில் பதிவான காட்சிகளின் பேரில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு, வினோத் (வயது 34) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில், வினோத் 2017ல் நடந்த கொலை வழக்கில் சிறைக்கு சென்று ஜாமினில் வெளியே வந்துள்ளார் என்பது உறுதியானது. MC Pipokinha Video: விமானி முன்பு தனது பின்னழகை திறந்து காண்பித்த பிரபல பாடகி; ஜாலியா இருக்கோம் என இப்படியா?.. வைரல் வீடியோ.!

இவரின் மனைவி சமீபத்தில் உயிரிழக்க, பூசாரி உயிரிழந்த மனைவியை மீண்டும் உயிருடன் கொண்டு வருகிறேன் என்று கூறி ரூ.2 ஆயிரம் பெற்றுள்ளார். அதற்கான பூஜையும் நடந்து வினோத்தின் மனைவி உயிருடன் வரவில்லை. இதனால் பூசாரியிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

அவர் பணம் தர மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த வினோத் பூசாரியை கொலை செய்து இருக்கிறார் என்பது உறுதியானது. விசாரணைக்கு பின்னர் வினோத்தை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

(The above story first appeared on LatestLY on May 30, 2023 05:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).