Maharashtra MLA Abu Azmi (Photo Credit: ANI)

ஜூலை 19, மும்பை (Maharashtra Politics): மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள சம்பாஜி நகர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் அபு அஸ்மி. இவர் தனது தொகுதியில் நடந்த பிரச்சனையை முன்வைத்து சர்ச்சைக்குரிய கேள்வியை முன்வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவை வாயிலில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அபு, "நான் வந்தே மாதரத்தை மதிக்கிறேன், ஆனால் நான் அதை படிக்க முடியாது, ஏனென்றால், "அல்லாஹ்வை" தவிர வேறு யாருக்கும் தலைவணங்க முடியாது என்று என் மதம் சொல்கிறது" என தெரிவித்தார். Earthquake: அமெரிக்காவில் அடுத்தடுத்த 2 நாட்களில் அதிபயங்கர நிலநடுக்கம்; மக்கள் பெரும் அச்சம்..! 

தொடர்ந்து பேசிய அவர், ஒருவர் இந்தியாவில் வாழ வேண்டும் என்றால், வந்தே மாதரம் பாட வேண்டும் என்று சிலர் கூறி வருகிறார்கள். நம்மால் முடியாது. நாங்கள் ஒரு கடவுளை மட்டுமே நம்புகிறோம்.

இதனால் அம்மாநிலத்தில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் எப்படி இவ்வாறாக பேசலாம்?. இந்தியாவில் உள்ள மக்களுக்கு பணியாற்றும் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார், எப்படி இவ்வாறான கருத்தை தெரிவிக்கலாம்? என பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.