ஆகஸ்ட் 17, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, கிழக்கு கல்யாண், டிஸ்கொன் பகுதியில் துர்கா தர்சன் குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த பகுதியில் 20 வயதுடைய ஆதித்யா காம்ப்லே என்ற இளைஞர் வசித்து வருகிறார். இதே பகுதியில் 12 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
12 வயதாகும் சிறுமியின் மீது ஆசைகொண்ட ஆதித்யா, சிறுமியை காதலிப்பதாக பலமுறை கூறிவந்துள்ளார். இரண்டு முறை நேரிலும் தனது காதலை வெளிப்படுத்திய நிலையில், இதில் விருப்பம் இல்லாத சிறுமியோ மறுப்பு தெரிவித்துள்ளார். தனது பெற்றோரிடமும் அவர் ஆதித்யாவின் தொல்லை குறித்து கூறி இருக்கிறார்.
இதனால் சிறுமி பெற்றோரின் தயவு இன்றி வீட்டை விட்டு வெளியே வருவது இல்லை. ஆகஸ்ட் 16ம் தேதியான நேற்று இரவு 8 மணியளவில் சிறுமி மற்றும் அவரின் தாய் என இருவரும் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டு இருந்துள்ளனர். CP Radhakrishnan Rajinikanth Meets: ஜார்கண்ட் மாநில ஆளுநருடன் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்திப்பு; மனதார நண்பரை வரவேற்ற ஆளுநர்.!
அப்போது, இவர்களை இடைமறித்த ஆதித்யா, சிறுமியிடம் மீண்டும் தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். சிறுமியின் தாய் ஆதித்யாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். சிறுமியும் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞன், சிறுமி மற்றும் அவரின் தாயை பலமுறை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் நிலைகுலைந்துபோன தாய் சரிந்துவிழ, கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியை சரமாரியாக குத்திக்கொண்டே அடித்துள்ளான். பதறிப்போன தாய் மாடிப்படிக்கட்டில் இருந்தவாறு அலறவே, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஆதித்யாவை பிடித்தனர். அவர் தப்பிக்க முயற்சித்தும் பலனில்லை.
பின், இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு அதிகாரிகள் வந்தபோது சிறுமியின் இறப்பு உறுதி செய்யப்பட்டது. படுகாயமடைந்த அவரின் தாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆதித்யாவை கைது செய்து விசாரித்தபோது, அவர் தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பாவித்து வருவதால், மருத்துவர்களின் உதவியை அதிகாரிகள் நாடியுள்ளனர்.
விசாரணையின்போதே ஆதித்யா பினாயில் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தால், அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டு இருக்கிறார். அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.