ஜூலை 25, நாக்பூர் (Maharashtra News): காதல் என்ற இன்பத்தை எதிர்கொள்ளாமல் இவ்வுலகில் யாரும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் காதல் இருக்கும். ஆனால், அவை நாம் இணையும் துணையின் மனநிலையால் நமது நிலையும் மாறும். காதல் வயப்படும் பலரும் சில தவறான நபர்களை தேர்வு செய்வதால், அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், 21 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார். 21 வயது இளைஞர் எப்போதும் காதலியின் மீது சந்தேகம், அவருடன் சண்டை போடுவது என நச்சுத்தன்மை கொண்ட நபராக இருந்து வந்துள்ளார். Disturbing Video: சுயநினைவின்றி கிடந்த இளைஞரின் மீது சிறுநீர் கழித்த கொடுமை; கடுமையாக தாக்கி வெறிச்செயல்.. அதிர்ச்சி வீடியோ லீக்.!
இதனால் ஆசை ஆசையாக காதல் செய்த 19 வயது இளம்பெண்ணுக்கு, சில ஆண்டுகளிலேயே காதலனின் செயல்பாடுகளால் விரக்தி ஏற்பட்டுள்ளது. காதலனை கைவிட்டு பிரியவும் இயலாமல் அவதிப்பட்டுள்ளார். காதலனும் காதலியை எப்போதும் மிரட்டி வந்ததாக தெரியவருகிறது.
பின்னாட்களில் காதலனின் கொடுமை தாங்காத இளம்பெண், வீட்டில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளான். அங்கு பெண்மணி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் உயிருக்கு போராடி வருகிறார்.