டிசம்பர், 11: மேற்கு வங்கம் (West Bengal) மாநிலத்தின் முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி (Mamata Banerjee), காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்னை விலக்கி திரிணமூல் காங்கிரஸ் (Trinamool Congress) என்ற கட்சியை தோற்றுவித்து அம்மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்றினார். காங்கிரஸ் (Congress) கட்சி பலம்பொருந்தி காணப்பட்ட காலங்கள் மலையேறி மாநில அளவில் கட்சியினருக்குள் ஏற்பட்ட அடுத்தடுத்த பிரச்சனைகளால் தனது இயக்கத்தின் ஒட்டுமொத்த பலத்தினை சிறிது சிறிதாக இழந்து தவித்து வருகிறது.
2024ல் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் பொருட்டு தற்போது ஆட்சியில் உள்ள பாஜக (BJP) தொடர்ந்து தனது களப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. பாஜக வேரூன்ற வாய்ப்பில்லை என்று கூறப்பட்ட இடமெல்லாம், அதன் கொடியை பறக்கவிட்டு தன்னை சாதனையாளராக மேம்படுத்தி வருகிறது. இப்படியாக களநிலை இருக்க, 2 முறை அடுத்தடுத்து ஆட்சியை கைப்பற்றி பாஜகவும் தன்னை வளர்த்துக்கொண்டது.
ராகுல் காந்தியின் (Rahul Gandhi) காங்கிரஸ் தலைவர் பொறுப்பு சர்ச்சை, அடுத்தடுத்த பல ஊழல் வழக்குகள் என அக்கட்சி பின்னடைவை சந்திக்க, காங்கிரசை நம்பாமல் வேறு மாற்று அணியை நம்பலாம் என்ற எண்ணத்திற்கும் மக்கள் வந்துவிட்டனர் என்பதை போல, பல மாநிலங்களில் காங்கிரஸ் சாராத இடதுசாரி எதிர்க்கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இடதுசாரி கட்சியில் பலம்பொருந்திய அமைப்பாக முந்தைய காலங்களில் காங்கிரஸ் பார்க்கப்பட்டாலும், இன்றளவில் அவைவெற்றியை சொற்ப அளவை எட்டுவதால் அதன் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. December Holiday: அடேங்கப்பா.. டிசம்பர் மாதத்தில் நமக்கு தெரியாமல் இத்தனை நாட்கள் அரசு விடுமுறையா?.. தெரிஞ்சா அசந்துபோவீங்க.!
ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான மூன்றாவது அணி காங்கிரஸ் அல்லாமல் உருவாகலாம் என்ற பேச்சுக்கள் அடிபட்டு இருந்த நிலையில், அதனை மேலும் வலுப்படுவதை போல தமிழகத்தில் நடந்த சந்திப்பு நிகழ்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால், இருவரும் அரசியல் ரீதியான சந்திப்பு இது இல்லை. அரசியல் குறித்தும் பேசவில்லை என்று அறிவித்து இருந்தாலும், கட்டாயம் பேச்சுவார்த்தைகள் என்பது நடந்திருக்கும். அவை எதிர்கால நடவடிக்கையால் மறைத்தும் வைக்கப்பட்டு இருக்கலாம்.
காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுனா கார்கே பொறுப்பேற்று இருந்தாலும், அவரது செயல்பாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கும் விதத்தில் அதிரடியாக இருக்க வேண்டும். ஆனால், அது எதிர்பார்த்த அளவு ஏதும் நடைபெறவில்லை. ராகுல் காந்தியோ மக்களை சந்திக்கிறேன் என கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பயணம் புறப்பட்டு செல்கிறார். அவரின் மீது மக்கள் முன்பு வாய்த்த நம்பிக்கை குறைந்ததால் அவருக்கு மாற்றான தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
இந்த விஷயத்தில், 2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக பாஜக சார்பில் யார் அறிவிக்கப்படுவார்? நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக இருந்து வழிநடத்தி செல்வாரா? அல்லது புதிய பிரதமர் வேட்பாளரை அக்கட்சி அறிவிக்குமா? காங்கிரசுக்கு எதிராக மூன்றாம் அணி உருவானால் யார் அதனை வழிநடத்துவார்கள்? ஓருவேளை மீண்டும் காங்கிரஸ் Vs பாஜக என்ற அளவிலேயே கூட்டணி தொடருமா? என்பதை காலம் தான் பதிலாக கூற வேண்டும் என்பதே நிதர்சனம்.