Girl Sad | Court Judgement (Photo Credit: Pixabay)

மே 25, படாவுன் (Uttar Pradesh News): திரைப்படங்களை மிஞ்சும் காட்சிகளை போல, இப்படியும் கர்ப்பிணி (Man Slit Pregnant Wife Womb) பெண்ணுக்கு கணவரால் கொடூரம் நடக்குமா? என குலைநடுங்க வைத்துள்ள சம்பவத்தின் பதறவைக்கும் துயரத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

ஆண் குழந்தைக்கு கணவர் விரும்பியதால் கர்ப்பம்: உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள படாவுன் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் பன்னா லால் (வயது 46). இவரின் மனைவி அங்கிதா தேவி. தம்பதிகளுக்கு 5 குழந்தைகள் இருந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு அங்கிதா மீண்டும் கர்ப்பமாகி இருக்கிறார். பன்னாவுக்கு தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற விருப்பம் இருப்பதால், தொடர்ந்து கணவரின் விருப்பத்துக்கேற்ப ஆறாவது முறையாக கருத்தரித்து இருக்கிறார்.

பூசாரியின் பேச்சைக்கேட்டு பயங்கரம்: இதனிடையே, உள்ளூர் பூசாரி ஒருவர் அங்கிதாவின் வயிற்றில் உள்ளது பெண் குழந்தை என்று கூற, கர்ப்பமானதில் இருந்து பன்னா தனது மனைவியின் கருவை கலைக்க பல வேலைகளை செய்து மனைவியை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், கருவில் வளரும் குழந்தையை கலைக்க மனமில்லாத அங்கிதா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த செப்டம்பர் 19ம் தேதி பன்னா வீட்டிற்கு வந்து குழந்தை குறித்து வாதம் செய்துள்ளார். Food Safety Inspection On Rameswaram Cafe: புகழ்பெற்ற ராமேஸ்வரம் கபேவில் கெட்டுப்போன உணவுப்பொருட்கள்.. அதிர்ந்து போன உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.!

வயிற்றை கிழித்த கணவர்: ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், 8 மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிந்துகொள்ள, அவரின் வயிறை அரிவாளால் கிழித்து இருக்கிறார். கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த விவகாரம் அக்கம் பக்கத்தினரால் காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சுதாரிப்புடன் செயல்பட்டு தேவியை டெல்லியில் உள்ள சாபிடார்ஜுங் மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.

இறந்துபோன ஆண் குழந்தை: அங்கு அங்கிதா தேவியின் உயிர் காப்பாற்றப்பட்டாலும், கருவில் இருந்த ஆண் குழந்தை இறந்துபோனது. பின் இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பன்னா லாலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பன்னாவின் மீது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 307 மற்றும் 313 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விஷயம் தொடர்பான வழக்கு விசாரணை, பாடவுன் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. School Boy Murder: 9 வயது சிறுவன் படுகொலை; விடுதியில் தங்கி படித்த சக மாணவர் கைது..! 

நீதிமன்றத்தின் தீர்ப்பு: வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி சவுரப் ஸஸேனா முன்னிலையில் நடைபெற்ற நிலையில், அவர் குற்றவாளியான பன்னா லாலுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, தொடக்கத்தில் மனைவியின் வயிறை தான் அறுக்கவில்லை, அது விபத்து என வாதிட்டனர், பின் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் உயிர்பிழைத்த காரணத்தால், அவரே முக்கிய சாட்சியாகவும் அமைந்தார்.