MK Stalin, Tamilnadu State Chief Minister, President of DMK Party (File Photo)

டிசம்பர் 6, சென்னை: தமிழகத்தில் கடந்த 2022 சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் திமுக (DMK) ஆட்சி அமைந்ததில் இருந்து பல்வேறு மாற்றங்கள், நிர்வாக சீர்திருத்தங்கள் போன்றவை நடந்து வருகின்றன. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக இ-பட்ஜெட் தாக்கல், வேளாண்துறைக்கு என தனி பட்ஜெட் போன்றவை பதிவுசெய்யப்பட்டது.

திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக, அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையில் முன்னெடுத்த முயற்சிகளால் தனது ஆட்சியை மீண்டும் அமைத்தது. அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு தலையாய நடவடிக்கைகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்புகளும் பெருக்கப்பட்டுள்ளன.

  1. நீட் தேர்வு எதிர்ப்பு: மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான நுழைவு தேர்வு எதிர்ப்பில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது காண்பித்த எதிர்ப்பை விட தற்போது முழு அரசு பலத்துடன் அதனை காண்பித்து வருகிறது. நீட் தேர்வு எதிராக ஏற்கனவே அதிமுக அனுப்பிய தீர்மானங்கள் ஆளுனராலேயே நிராகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.  ஆனால், திமுக தலைமையிலான அரசு தொடர்ந்து நீட்டுக்கு எதிராக அகில இந்திய அளவில் கொடுத்து வரும் குரலால், ஆளுநர் மாற்றப்பட்டு தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனை ஆளுநர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் இருந்தாலும் தமிழகம் மட்டுமே இன்றுவரை நிட்டை மிகத்தீர்விரமாக எதிர்த்து வருகிறது.
  2. உயர்கல்வியில் பெண்களுக்கு முக்கியத்துவம்: தமிழகம் என்னதான் வளர்ந்த மாநிலமாக இருந்தாலும், உயர்கல்வி படிப்பில் மாணவ - மாணவிகளுக்கு இருக்கும் தடைகள் அவர்களின் எதிர்காலத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது. அதனை கருத்தில் கொண்டு திமுக தலைமையிலான அரசு உயர்கல்வியில் சேரும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தினை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டம் வாயிலாக இலட்சக்கணக்கான ஏழை-எளிய மாணவிகள் பயன்பெறுவார்கள்.
  3. மகளிருக்கான இலவச பேருந்து: ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள். அவர்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என்ற விஷயத்தில் திமுக பெரியாரிய கொள்கையோடு உறுதியாக இருக்கிறது. பெண்கள் விஷயத்தில் அவர்கள் சாதனைகள் புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் தலையாக செயலாற்றி வருகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டும், அனைவரும் இலவசமாக பேருந்துகளில் சென்று வரும் வகையிலும் இலவச பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் வாயிலாக பல கோடிப்பெண்கள் பலன் பெற்றுள்ளனர். 2024 Parliament: மம்தா பானர்ஜி தலைமையில் ஓரணியாக திரளும் மூன்றாம் அணி?.. பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகம் என்ன?…! 
  4. முதலீடு ஈர்ப்பு:  முதலீடு ஈர்ப்பு விஷயத்தில் திமுக அரசு தனது ஆட்சிப்பொறுப்பேற்ற ஒரே வருடத்தில் ரூ.68 ஆயிரத்து 375 கோடி முதலீட்டினை ஈர்த்துள்ளது. இதன் வாயிலாக 2 இலட்சத்து 5 ஆயிரத்து 802 பேருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அரசின் சார்பில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளன.
  5. சமூகநீதி-சம உரிமை: தமிழகத்திற்கு சமூக நீதியின் தொட்டில் என்ற அடைமொழியும் உண்டு. அதனை மீண்டும் உறுதி செய்யும் பொருட்டு அரசு அறிவித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், குறவர் மக்களுக்கு நலத்திட்ட உதவி அறிவிப்புகள் மற்றும் திட்ட முன்னெடுப்புகள் அரசின் சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்தது.
  6. இல்லம் தேடி கல்வி & மருத்துவம்:  தமிழகம் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்தாலும், சில நேரங்களில் மக்களுக்கு மருத்துவமும், கல்வியும் இன்றளவு கேள்விக்குறியாவது தொடர்கதையாகியுள்ளது. அதனை தவிர்க்கும்பொருட்டு மக்களுக்கு வீடு வீடாக கல்வியும், மருத்துவமும் கிடைக்க இருபெரும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஒவ்வொரு மக்களுக்கும் கல்வி, மருத்துவம் சென்றடைகிறது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 6,2022 06:47 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).