PMK Anbumani - AIADMK Jayakumar - PMK K Balu (Photo Credit: Twitter)

ஜனவரி 4, சென்னை: அன்புமணியின் கருத்தால் கொந்தளித்த முன்னாள் (AIADMK & PMK Party conflicts both Opinion) அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் காட்டமான பதில்களை கூற, அதற்கு பதில் கண்டனம் எழுந்து பாமக தரப்பில் பதில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 30ல் புதுச்சேரியில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் (Dr. Anbumani Ramadoss, PMK President), அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பிளவுபட்டு இருக்கிறது. இதனால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என பேசினார்.

இந்த கருத்து அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்த, அதற்கு கண்டனம் தெரிவித்த அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் (Former AIADMK Minister Jayakumar), "மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லையென்றால் பாமக இல்லை. பாமக என்ற கட்சி வெளியே தெரிந்திருக்காது. அதிமுகவால் மட்டுமே பாமகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது. அன்புமணி எம்.பி பதவி அதிமுகவால் கிடைத்தது" என பேசியிருந்தார். PK SekarBabu Talks: “மகள் முடிவின் வலியை மறந்துவிட்டேன்” – மகளின் காதல் திருமணம் குறித்து மனம்திறந்த அமைச்சர் சேகர் பாபு.! 

அதிமுக முன்னாள் அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு (K.Balu Advocate, PMK Party), "கூட்டணி வைப்பதன் காரணமாக இரண்டு கட்சியினரும் பலன் பெறுகின்றனர். இதனால் எங்களால் வெற்றி என ஒருதரப்பினர் தெரிவிக்க முடியாது. அதிமுக 4 பிரிவாக உள்ளது என்பது குழந்தைகளுக்கு கூட தெரிந்தது ஆகும்.

அதிமுக பிளவு உட்கட்சி விவகாரம் என அன்புமணி கூறியிருக்கிறார். கடந்த 1996ல் அதிமுக வீழ்ச்சியடைந்திருந்தபோது, அன்றைய சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாமக 4 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றது. அதிமுக வீழ்ந்தபோது, அதனை உயிரூட்டி பாமக வளர்த்தது.

பாராளுமன்ற தேர்தலில் கடந்த 1998ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாக அலுவலகத்திற்கு வந்து கூட்டணி அமைத்தார். அன்று பாமக அதிமுகவுடன் இல்லாமல் இருந்திருந்தால், அதிமுக பெரிய சரிவை சந்தித்திருக்கும். 2001ல் மருத்துவர் இராமதாஸின் வருகைக்காக ஜெயலலிதா காத்திருந்து கூட்டணியமைத்தார், ஆட்சியை பிடித்தார்.

பாமகவால் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்கள். ஜெய்குமாருக்கும் 2 முறை தொடர்ந்து அமைச்சர் பதவி வழங்க நாங்கள் காரணம். இவற்றையெல்லாம் பாமக வெளியே சொன்னது இல்லை. இவ்விவகாரத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே விளக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 4, 2023 10:26 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).