BJP Office Snake (Photo Credit: Twitter)

மே 13, பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அங்கு ஆட்சியைப் பிடிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிரமான முயற்சிகளில் இறங்கியுள்ள நிலையில், குறைந்த அளவிலான தொகுதிகளில் போட்டியிட்ட குமாரசாமியின் ஜனதா கட்சியினர் அங்கு அரசியல் திருப்புங்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் முக்கிய நபராக இருக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை முதல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பதிவுகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலைமையில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில், பாஜக பின்தங்கி முன்னிலை வகித்து வருகிறது. ஜனதா மற்றும் சுயேட்சைகள் சேர்ந்து 25 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்பதால் யார் ஆட்சியை தக்க வைக்க போகிறார்? என்ற பரபரப்பானது எழுந்துள்ளது. MI Vs GT: வான்கடே மைதானத்தை அதிரவைத்த சூரியகுமார் யாதவ்.. நின்ற இடத்தில் 80 ரன்கள், 103 க்கு நோ அவுட்.! 

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அம்மாநில பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை தேர்தல் முடிவுகள் அறிந்து கொள்ள தொண்டர்களுடன் பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது அங்கு பாம்பு ஒன்று தென்பட்டதால் தொண்டர்களிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வனத்துறையினர் மூலமாக அந்த பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.