டிசம்பர் 29, திருச்சி: இளைஞர்களிடையே பரவி வரும் இரத்தத்தால் ஓவியம் (Blood Art Culture) வரையும் கலாச்சாரம் என்பது தடை செய்யப்படுகிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாட்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் (Minister Ma.Subramanian at Trichy Airport) பேசுகையில், "உலகளவில் புதிய கலாச்சாரம் தலைதூக்கி இருக்கிறது. அதாவது இரத்தத்தை எடுத்து ஓவியம் வரைந்து காதலை வெளிப்படுத்துகிறார்கள். இதனை தொழிலாக சிலர் செய்கிறார்கள். இவை தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. Andra Shocking Incident: சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் பரிதாபம்; கூட்டநெரிசலில் சிக்கி 7 பேர் பலி..!
இரத்ததானம் பல உயிர்களை காப்பாற்ற உதவி செய்கிறது. இந்த இரத்தத்தை வைத்து ஓவியம் என்பது சரியானது கிடையாது. இரத்தத்தை எடுக்க மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் என ஒவ்வொரு நிலையிலும் பாதுகாப்பு முக்கியம். ஆனால், ஓவியத்திற்கு எடுக்கப்படும் இரத்தம் பாதுகாப்பற்ற ஒன்று. ஒரு ஊசியை எத்தனை பேருக்கு உபயோகம் செய்கிறார்கள் என்பது தெரியாது. அதனை முறையாக கையாளாத பட்சத்தில் எச்.ஐ.வி போன்ற தொற்றுகளும் ஏற்படும்.
சென்னையில் உள்ள வடபழனி, தியாகராஜ நகர் போன்ற இடங்களில் செயல்பட்டு வந்த இரத்தத்தால் ஓவியம் வரையும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி இச்செயலை செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. காதலை வெளிப்படுத்தவும், ஓவியத்தை வரையவும் பல வழிகள் உள்ளன. இவை சரியானது இல்லை" என்று தெரிவித்தார்.