PM Narendra Modi (Photo Credit: YouTube)

ஜூன் 04, டெல்லி (New Delhi): 2024 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 291 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றியை அடைந்து, மீண்டும் ஆட்சியை தக்க வைக்கவுள்ள பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாளை கூட்டணிக்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து, பாஜக ஆட்சி அமைக்கும் முயற்சிகளை கையில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியால் இந்தியா முழுவதும் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பாஜக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் மதியத்திற்கு பின் ஆலோசனை மேற்கொண்டனர்.

140 கோடி இந்தியர்களுக்கான வெற்றி: இந்நிலையில், பாஜக டெல்லி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அங்கு பாஜக தேசிய தலைவர்கள் ஜேபி நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமித் ஷா ஆகியோர் தங்களின் பாராட்டுகளையும் வழங்கினர். அதனைத்தொடர்ந்து, தொண்டர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், "மக்களவை தேர்தலில் அடைந்துள்ள வெற்றி வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வெற்றியே ஆகும். பாஜகவின் மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்கும், ஆசிர்வாதத்திற்கும் நன்றி. மக்களவை தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பாக நடத்தி முடித்து இருக்கிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைய மக்கள் வழிவகை செய்துள்ளனர். இது வரலாற்று வெற்றி ஆகும். தேர்தலில் கிடைத்திடும் வெற்றி மக்களுக்கு மேலும் உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை வழங்குகிறது. பாஜக தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றி 140 கோடி இந்தியவர்களுக்கு கிடைத்த வெற்றி ஆகும். Actor Vijay Wish to Chandrababu Naidu: ஆந்திர அரசியலில் வெற்றிவாகை சூடிய சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்..! விபரம் உள்ளே.! 

காங்கிரசை புறக்கணித்த வடகிழக்கு மாநிலங்கள்: தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு இணையான வெற்றி என்பது நமக்கு கிடைக்கப்பட்டுள்ள்ளது. பீகார், ஆந்திர, சிக்கிம், அருணாச்சல உட்பட வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியை முற்றிலுமாக புறக்கணித்து இருக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வாக்குப்பதிவாகி சாதனை படைக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், அருணாச்சலம், ஒடிசா மற்றும் இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பாஜக முழு அளவிலான வெற்றியை அடைந்துள்ளது. கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி அடைந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காக பலர் உயிர்த்தியாகம் செய்து இருக்கின்றனர்.

நாட்டுக்காக, மக்களுக்காக உழைப்பு தொடரும்: 1962 ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் ஒரு ஆட்சி மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அமைகிறது. சகோதர, சகோதரிகள் எனக்கு அளித்த அன்பை எண்களால் எண்ணிவிடமுடியாது. நாட்டுக்கு என்றும் நாங்கள் உழைப்போம். அதில் இருந்து எப்போதும் பின்வாங்க மாட்டோம். கொரோனா காலத்தில் நாம் வீழ்ச்சியை சந்தித்தாலும், அதனை திறம்பட எதிர்கொண்டு வெற்றி அடைந்தோம். ஜிஎஸ்டி உட்பட பல சீர்திருத்தங்கள் நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளது. பல கட்சிகளை ஒன்றிணைத்து கட்டமைக்கப்பட்ட இண்டி கூட்டணிகளை காட்டிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி அடைந்துள்ளது. Rahul Gandhi Thanks to People: "தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி" - காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.! 

ஒவ்வொரு இந்தியரின் ஆசீர்வாதம்: டெல்லி, குஜராத் உட்பட பல மாநிலங்களில் நல்ல வரவேற்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மீண்டும் கிடைத்துள்ளது. நாட்டின் நலன் மற்றும் எதிர்காலத்தை முன்னிறுத்தியே நமது அரசு பல முடிவுகளை எடுத்துள்ளது. இந்தியாவின் பெண்கள், குழந்தைகள் என ஒவ்வொருவரின் ஆசிர்வாதமும் கிடைத்துள்ளது. வரலாற்றில் இல்லாத அளவு பெண்களின் வாக்கு இம்முறை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் பல கட்சிகள் இணைந்தும், இண்டி கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமரும் நாம் ஊழலை முற்றிலும் ஒழிப்போம்" என பேசினார்.