ஜூன் 04, சென்னை (Andhra Pradesh News): 2024 இந்தியா தேர்தல்கள் முடிவுகளின்படி, தொடர்ந்து 3வது முறையாக பாஜக தலைமையிலான ஆட்சி அமைவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏழுகட்டமாக பிரித்தது நடத்தப்பட்ட மக்களவை தேர்தலுடன், ஆந்திரப்பிரதேசம் (AP Poll Results 2024) மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. மக்களவை தேர்தலில் தேசிய அளவில் பாஜக 290 தொகுதிகள் முன்னிலை பெற்றும், காங்கிரஸ் 235 தொகுதியில் முன்னிலையிலும் இருக்கிறது. ஆட்சி அமைக்க தேவையான 272 தொகுதிகளில் பாஜக நடப்பு மக்களவை தேர்தலில் வெற்றிபெறவில்லை என்றாலும், கூட்டணியாக 292 தொகுதிகளில் வெற்றி அடைந்துள்ள காரணத்தால், ஆட்சி அமைக்க தேவையான ஆலோசனையில் அக்கட்சியினர் ஈடுப்டுள்ளனர். அதேநேரத்தில், காங்கிரஸ் தரப்பிலும் ஆட்சியை அமைக்க சாதகமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாளை காங்கிரஸ் தலைமை தனது கூட்டணிக்கட்சிகளுடன் இதுதொடர்பாக ஆலோசனையில் ஈடுபடவுள்ளது. Lok Sabha Election Results 2024: குடும்ப உறுப்பினர்களோ 22, வேட்பாளருக்கு கிடைத்த வாக்கோ 4.. வினோத முடிவால் சோகத்தில் வேட்பாளர்.!
தெலுங்கு தேசம் மிகப்பெரிய வெற்றி: ஆந்திர மாநிலத்தை பொறுத்தமட்டில் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்று வந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, அம்மாநிலத்தில் தெலுங்குதேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஒன்றாக செயல்பட்டது. இதனால் தற்போது அங்குள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 150+ தொகுதிகளை சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. 17+ தொகுதிகளை மட்டும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கைப்பற்றி படுதோல்வி அடைந்துள்ளது.
நடிகர் விஜய் வாழ்த்து: இந்நிலையில், விரைவில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் ஆட்சியை அமைக்கும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2026 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் விஜயும் களமிறங்கவுள்ள நிலையில், அவரின் அரசியல் ஈடுபாட்டை உறுதி செய்ய மரியாதையை நிமித்தமான வாழ்த்துக்களை விஜய் தனது அரசியல் இயக்கத்தின் வாயிலாக பதிவு செய்துள்ளார்.
Congratulations to Shri @ncbn garu and @JaiTDP for the decisive victory in the assembly elections to lead #AndhraPradesh
Wishing the people of AP great progress under your visionary leadership.
Vijay,
President,
Tamilaga Vettri Kazhagam
— TVK Vijay (@tvkvijayhq) June 4, 2024